பாகிஸ்தான் நெருங்க முடியாது.. ஆஸியை தோற்கடிக்க அந்த அணியால் மட்டுமே முடியும்.. மைக்கேல் வாகன் கருத்து

Micheal Vaughan
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.

டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கி நடைபெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தானை ஆரம்பம் முதலே தெறிக்க விட்ட அந்த அணி 2வது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு சுருட்டி மிரட்டலான வெற்றி பெற்றது. அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 15வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வீர நடை போடுவதை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

ஆஸிக்கு சமமான அணி:
மறுபுறம் 1995க்குப்பின் தொடர்ந்து 28வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் பாகிஸ்தான் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தங்களுடைய சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளை பயன்படுத்தி பாகிஸ்தானை வெற்றியை நெருங்க முடியாத அளவுக்கு ஆஸ்திரேலியா வீழ்த்தியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

அப்படி வலுவாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பதற்கான திறமை இந்தியாவிடம் மட்டுமே இருப்பதாக பாராட்டும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா தெளிவாக வெற்றி பெற்றது. அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளில் அசத்துவதற்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்கள்”

- Advertisement -

“இப்போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த நேத்தன் லயனுக்கு வாழ்த்துக்கள். தற்போதைய நிலைமையில் ஆஸ்திரேலிய அணிக்கு அவர்களின் சொந்த மண்ணில் போட்டியை கொடுக்கக்கூடிய உபகரணங்கள் இந்திய அணியிடம் மட்டுமே இருக்கிறது” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 35 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 26 வெற்றி 4 தோல்வி 5 ட்ராவை பதிவு செய்துள்ளது. அந்த 4 தோல்விகளும் இந்தியாவுக்கு எதிராக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியா முதல் முறையாக பெற்றதாகும்.

இதையும் படிங்க: அந்த 2 பேர் இல்ல.. தெ.ஆ மண்ணில் ஜெய்க்க இந்தியாவுக்கு இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது.. கவாஸ்கர் அறிவுரை

குறிப்பாக 2018/19இல் வார்னர், ஸ்மித் இல்லாமல் இந்தியா தங்களை தோற்கடித்து விட்டதாக ஆஸ்திரேலியா வசை பாடியது. அதற்கு 2020/21இல் வார்னர், ஸ்மித் ஆகியோரை வைத்துக் கொண்டே 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த பின் அஜிங்கிய ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா காபா கோட்டையை தகர்த்து மூவர்ண கொடியை பறக்க விட்டு 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement