80 பந்து.. 36க்கு 8 விக்கெட்.. சீட்டுக்கட்டாக சரிந்த பாகிஸ்தானை.. சுருட்டி வீசி மாஸ் காட்டிய இந்தியா

- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அப்துல்லா ஷபிக்கை 20 ரன்களில் சிராஜ் அவுட்டாக்கிய நிலையில் மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்திக் பாண்டியா வேகத்தில் கேஎல் ராகுல் சிறப்பான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அதனால் 73/2 தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள்.

- Advertisement -

சரிந்த பாகிஸ்தான்:
ஆனால் 3வது விக்கெட்டுக்கு 82 ரன்களுக்கு மேல் தாக்கு பிடிக்காத அந்த ஜோடியில் பாபர் அசாமை 50 ரன்கள் எடுத்ததும் சிராஜ்க்கு கிளீன் போல்ட்டாக்கினார். அதை விட அடுத்ததாக வந்த சவுத் ஷாக்கிலை 6 ரன்களில் காலி செய்த குல்தீப் யாதவ் அதே ஓவரில் அடுத்ததாக வந்த இப்திகார் அகமதையும் 4 ரன்களில் மேஜிக் பந்தால் கிளீன் போல்ட்டாக்கினார்.

அடுத்த ஓவரிலேயே மறுபுறம் சவாலை கொடுத்த முகமது ரிஸ்வானை 49 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய பும்ரா அதற்கடுத்த சில ஓவர்களில் பாகிஸ்தான் துணை கேப்டன் சடாப் கானையும் 2 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் 171/7 என சரிந்த பாகிஸ்தான் 200 ரன்கள் தொடுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது காப்பாற்ற வேண்டிய முகமது நவாஸ் 4, ஹசான் அலி 12 ரன்களில் அவுட்டாகி அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 50 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்காத பாகிஸ்தான் 42.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 191 ரன்களுக்குக்கு சுருண்டது. குறிப்பாக 155/2 என ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த அந்த அணி பாபர் அசாம் அவுட்டான பின் இந்தியாவின் அற்புதமான அனல் தெறித்த பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் சரிந்து மேற்கொண்டு 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக சுருண்டது.

இதையும் படிங்க: மீண்டும் ஆக்டிங்கை போட்டு கடுப்பேற்றிய ரிஸ்வான்.. ஸ்பாட்டிலேயே கலாய்த்த விராட் கோலி.. நடந்தது என்ன?

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பாண்டியா, சிராஜ், ஜடேஜா,பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து வரலாற்றில் 8வது முறையாக உலக கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடிக்கும் முனைப்புடன் இந்தியா பேட்டிங் செய்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement