இங்கிலாந்தை தோற்கடித்து ஆஸியிடம் இழந்த கௌரவத்தை மீட்டெடுத்த இந்தியா.. ஆல் ஏரியாவிலும் கில்லியாக சாதனை

IND Test and T20
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அதன் வாயிலாக 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்தது.

மேலும் அந்த வெற்றியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை வலுவாக தக்க வைத்துள்ள இந்தியா அடுத்த வருடம் நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை 50% உறுதி செய்துள்ளது. அத்துடன் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தையும் இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

மீட்டெடுத்த இந்தியா:
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான டாப் 10 அணிகள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 4 போட்டிகளில் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தொடரை வென்ற இந்தியா கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் மொத்தம் 122 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா தரவரிசையில் ஆஸ்திரேலியாவை முந்தி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியுள்ளது.

சொல்லப்போனால் ஏற்கனவே நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்தியாவை கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானை 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்த ஆஸ்திரேலியா பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனால் தற்போது 4 வெற்றிகளை பெற்றதால் 117 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவை 2வது இடத்திற்கு தள்ளிய இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

- Advertisement -

இது மட்டுமில்லாமல் ஏற்கனவே ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையிலும் 121 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது போக சர்வதேச 20 ஓவர் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையிலும் 266 புள்ளிகளுடன் இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலித்து வருகிறது. அதன் காரணமாக தற்போது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஐசிசி தரவரிசையிலும் ஒரே சமயத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அணி என்ற உலக சாதனையை மீண்டும் இந்தியா சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க: சவால்ன்னா அந்த பையனுக்கு ரொம்ப புடிக்குது.. நிச்சயம் பெரிய ஆளா வருவான் – இளம்வீரரை வாழ்த்திய ரோஹித் சர்மா

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மட்டுமே டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தது. அந்த வகையில் ஆல் ஏரியாவிலும் கில்லியாக செயல்பட்டு வரும் இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement