30 வருடங்கள்.. பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் செய்யாத.. மாஸ் சாதனை படைத்த இந்தியா

IND vs RSA 2024 Test Series Winner
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. சொல்லப்போனால் இத்தொடரின் முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது.

அதனால் 2 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இதன் வாயிலாக 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா புத்தாண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -

இந்தியாவின் மாஸ் சாதனை:
முன்னதாக கேப் டவுன் நகரில் ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலி 46, ரோஹித் சர்மா 39 ரன்கள் எடுத்து போராடியும் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதன் பின் 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாபிரிக்கா ஐடன் மார்க்கம் 106 ரன்கள் எடுத்து போராடியும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்களை எடுத்தார். இறுதியில் 79 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 17*, ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

இதன் வாயிலாக இப்போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானத்தில் கடந்த 30 வருடங்களில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இங்கு இதற்கு முன் விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்விகள் 2 டிராவை மட்டுமே சந்தித்த இந்தியா முதல் முறையாக இப்போது தான் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது. சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த கேப் டவுன் மைதானத்தில் ஒரு வெற்றியை பதிவு செய்த முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: இப்படி இந்த தொடர் முடியும்னு நான் நினைக்கல.. இருந்தாலும் பெருமையா இருக்கு – தோல்விக்கு பிறகு டீன் எல்கர் பேட்டி

இதற்கு முன் இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டு அணிகள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளன. ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம் இலங்கை போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த எந்த அணிகளும் இந்த கேப் டவுன் மைதானத்தில் வென்றதில்லை. இருப்பினும் தற்போது அந்த கேப் டவுன் கோட்டையை தகர்த்த முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளது.

Advertisement