இப்படி இந்த தொடர் முடியும்னு நான் நினைக்கல.. இருந்தாலும் பெருமையா இருக்கு – தோல்விக்கு பிறகு டீன் எல்கர் பேட்டி

Elgar
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்த தென்னாப்பிரிக்க அணியானது கேப்டவுன் நகரில் நடைபெற்ற முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி நேற்று கேப்டவுன் நகரில் துவங்கிய இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 55 ரன்களை மட்டுமே குவித்தது. தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 153 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணியானது 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. அதன்படி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 176 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி 79 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸ்சில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியதாவது :

- Advertisement -

இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி. இந்த போட்டியில் நாங்கள் ஒரு நல்ல பாசிட்டிவ்வான எண்ணத்துடன் தான் களமிறங்கினோம். ஆனாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர். இரண்டு அணிகளிலும் இளம்வீரர்கள் இருந்ததால் மிகச் சிறப்பாக இந்த போட்டி சென்றது. இந்த தொடரை நாங்கள் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : கண் மூடி திறப்பதற்குள் முடிந்த 2வது டெஸ்ட்.. 92 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை

ஆனால் தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ததும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்திய வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். அதோடு மார்க்ரம் இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸ்சில் சதம் அடித்தது மிகச் சிறப்பான ஒரு ஆட்டம் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகவே எங்களது அணி சிறப்பாக செயல்பட்டது. இதுபோன்ற போட்டிகளில் இருந்து நாம் நிறைய விடயங்களையும், அனுபவங்களையும் கற்றுக் கொள்ள முடியும் என டீன் எல்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement