
இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது. அதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை 28ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லக்கேல் நகரில் துவங்கியது. மழையால் தாமதமாக 7.45 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு குஷால் மெண்டிஸ் ஆரம்பத்திலேயே 10 (11) ரன்னில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த குசால் பெரேரா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீரர் நிசாங்கா 32 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வால் சாதனை:
அதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கமிண்டு மெண்டிஸ் மற்றும் குசால் பெரேரா ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். ஆனால் அப்போது மெண்டிஸை 26 ரன்களில் காலி செய்த ஹர்திக் பாண்டியா அதே ஓவரில் மறுபுறம் அச்சுறுத்தலை கொடுத்த பெரேராவையும் 53 (34) ரன்களில் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் அசலங்கா 14, சனாக்கா 0, ஹஸரங்கா 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இறுதியில் ரமேஷ் மெண்டிஸ் 12 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் இலங்கை 161/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து கம்பேக் கொடுத்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3, ஹர்டிக் பாண்டியா 2, அர்ஷ்தீப் சிங் 2, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்ய துவங்கிய போது மழை வந்தது. அதனால் 8 ஓவரில் 78 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய இந்தியாவுக்கு சஞ்சு சாம்சன் ஆரம்பத்திலேயே தீக்சனா சுழலில் டக் அவுட்டானார். இருப்பினும் எடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் அதிரடியாக 26 (12) ரன்கள் குவித்து பதிரனா வேகத்தில் அவுட்டானார். அதே போல மறுபடியும் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு 30 (14) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அதையும் சேர்த்து 2024 காலண்டர் வருடத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தினார். குறிப்பாக கடந்த மார்ச் – ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மட்டுமே அவர் 712 ரன்கள் அடித்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. இறுதியில் ஹர்திக் பாண்டியா 22* (9), ரிஷப் பண்ட் 2* எடுத்தடதால் 6.3 ஓவரிலேயே 81/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க: பாண்டியாவும் இல்லன்னா இந்தியா கஷ்டப்படும்.. கேப்டன்ஷிப்பை பறிச்சது நல்ல முடிவு.. ஸ்காட் ஸ்டைரிஸ் வரவேற்பு
அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா முதல் தொடரிலேயே வெற்றி பெற்று தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.