6க்கு 6 வெற்றி.. மிரட்டிய இலங்கையின் நிஷாங்கா.. சூப்பர் ஓவரில் அடக்கிய இந்தியா.. சாதனை வெற்றி

Ind vs sl super over
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் செப்டம்பர் 26ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 203 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இந்திய அணிக்கு அபிஷேக் ஷரமா ஆரம்பத்திலேயே பட்டாசாக விளையாடி 61 (31) ரன்கள் குவித்து மிரட்டினார்.

மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் 39 (23), திலக் வர்மா 49* (34), அக்சர் பட்டேல் 21* (15) ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இலங்கை அணிக்கு குஷால் மெண்டிஸ் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டானார். ஆனால் மறுபுறம் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய இலங்கை:

அடுத்ததாக வந்த குசால் பெரேரா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி இந்தியாவை வெளுத்து வாங்கினார். 2வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவுக்கு பயத்தைக் கொடுத்த போது பெரேரா 58 (32) ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய நிசாங்கா 52 பந்துகளில் சதத்தை அடித்து தெறிக்க விட்டார்.

இருப்பினும் மறுபுறம் வந்த கேப்டன் அசலங்கா 5, கமிண்டு மெண்டிஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனாலும் சனாகா அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ராணா முதல் பந்திலேயே நிஷாங்காவை 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 107 (58) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அடக்கிய இந்தியா:

அடுத்த 5 பந்துகளில் அவருக்கு எதிராக 2, 1, 2, 4 ரன்கள் அடித்த இலங்கை கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது 2 ரன்கள் மட்டுமே அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இலங்கைக்கு சனாக்கா 22* (11), லியனகே 2* (2) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்யத் தவறினார். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்ததாக வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இலங்கை 2/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 1 சிங்கிள், 1 ஒயிட் கொடுத்து குசால் பெரேரா மற்றும் சனாக்கா ஆகியோரின் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக 3 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஹஸ்ரங்கா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே சூரியகுமார் 3 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: 202 ரன்ஸ்.. ரிஸ்வான், கோலியின் சாதனையை உடைத்த அபிஷேக்.. ஆசியக் கோப்பையில் 3 புதிய வரலாற்று சாதனை

அதனால் இலங்கையை சூப்பர் ஓவரில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்ற இந்தியா நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 6 சூப்பர் ஓவர்களில் இந்தியா 6வது வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் சூப்பர் ஓவர்களில் 100% வெற்றிகளைப் பெற்றுள்ள அணி என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Advertisement