202 ரன்ஸ்.. ரிஸ்வான், கோலியின் சாதனையை உடைத்த அபிஷேக்.. ஆசியக் கோப்பையில் 3 புதிய வரலாற்று சாதனை

IND vs SL
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் கடைசி சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 26ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடினார்.

ஆனால் எதிர்புறம் சுப்மன் கில் 4 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் தடுமாறி 12 (13) ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டிய நிலையில் எதிர்ப்புறம் அசத்திய அபிஷேக் 22 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து வெளுத்து வாங்கிய அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 (31) ரன்களை 197.33 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அட்டகாசமாக 1 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டு 39 (23) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் அவுட்டான போதிலும் மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக விளையாடினார். டெத் ஓவர்களில் அசத்திய அவர் 49 (34) ரன்கள் குவித்து சிக்ஸருடன் நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

அவருடன் இணைந்து கடைசி நேரத்தில் வெளுத்த அக்சர் பட்டேல் 21* (15) ரன்கள் குவித்ததால் 20 ஓவரில் இந்தியா 202/5 ரன்களை குவித்தது. இன்றையப் போட்டியில் மிடில் ஆடர் கொஞ்சம் சிறப்பாக விளையாடியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. இலங்கை அணிக்கு தீக்சனா, சமீரா, ஹசரங்கா, சனாக்கா, கேப்டன் அசலங்கா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

- Advertisement -

அபிஷேக் 3 சாதனை:

முன்னதாக நடப்பு ஆசியக் கோப்பையில் அபிஷேக் சர்மா 61, 75, 74, 38, 31, 30 என இதுவரை மொத்தம் 6 போட்டிகளில் 309* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஆசிய டி20 கோப்பை தொடரில் 300 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அபிஷேக் படைத்துள்ளார். மேலும் ஒரு ஆசியக் கோப்பை டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்து ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ

இதற்கு முன் 2022 ஆசியக் கோப்பை டி20 தொடரில் விராட் கோலி 276 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஒரு ஆசிய டி20 கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 2022 ஆசிய டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக முகமது ரிஸ்வான் 281 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

Advertisement