ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்து ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ

Abhishek and Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றுக்கான கடைசி 18-வது ஆட்டமானது செப்டம்பர் 26-ஆம் தேதி துபாய் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா :

அந்தவகையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது வரை 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்து வலுவான துவக்கத்தை கண்டுள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேபோன்று துவக்க வீரரான சுப்மன் கில் 4 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

பின்னர் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரது ஜோடி இரண்டாம் பாதியில் தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது 31 பந்துகளை சந்தித்த அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 196.77 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 61 ரன்களை குவித்து அசத்தினார். இந்த ஆசிய கோப்பை தொடரில் அவரது அதிரடி ஆட்டம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் குறிப்பாக இன்று அவர் அடித்த அரைசதத்தின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் சமன் செய்து அசத்தியுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்த போட்டியில் அவர் 22 பந்துகளை சந்தித்தபோது 50 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கும் குறைவாக அதிகமுறை அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவை அவர் சமன் செய்துள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 25 பந்துகளுக்கும் குறைவாக அதிகமுறை அரைசதம் அடித்த வீரராக சூரியகுமார் யாதவ் (7 முறை) முதலிடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த கேப்டன் – டாசுக்கு பிறகு அறிவிப்பு

இவ்வேளையில் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த ரோஹித் சர்மாவுடன் இன்று அபிஷேக் சர்மா அந்த சாதனையை பகிர்ந்துள்ளார். தற்போது 25 வயதே நிரம்பியுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக டி20 போட்டியில் விளையாடுவார் என்பதனால் சூரியகுமார் யாதவை கடந்து சரித்திர சாதனையும் நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement