- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 – 0.. தெ.ஆ அணியை ஒய்ட்வாஷ் செய்து இந்தியா மிரட்டல் வெற்றி.. 21 வருட வரலாற்று சாதனை படைத்த மந்தனா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் முதலிரண்டு போட்டிகளிலும் தங்களுடைய சொந்த மண்ணில் வெற்றி கண்ட இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இந்தத் தொடரின் கடைசி போட்டி ஜூன் 23ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த துவக்க வீராங்கனைகள் கேப்டன் லாரா 61 (57) ரன்களும் டஸ்மின் பிரிட்ஸ் 33 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்து வந்த மேரிசன் காப் 7, போஸ்க் 5, சுனே லாஸ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் லோயர் மிடில் ஆர்டரில் டீ கிளார்க் 26, டீ ரிடர் 26* ரன்கள் எடுத்தும் 50 ஓவரில் தென்னாபிரிக்க 215/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஒய்ட்வாஷ் வெற்றி:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 216 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் அட்டகாசமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவருடன் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய ஷபாலி வர்மா 25 ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த பிரியா புனியா இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 28 ரன்னில் அவுட்டானார். ஆனால் இந்த பக்கம் அரை சதமடித்து அசத்திய மந்தனா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்த அவர் இப்போட்டியில் 11 பவுண்டரியுடன் 90 (83) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றுடன் சென்றார்

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 42, ஜெமிமா 19*, ரிச்சா கோஸ் 6* ரன்கள் எடுத்ததால் 40.4 ஓவரிலேயே 220/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த இந்தியா ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்று சொந்த மண்ணில் தங்களை வருமான அணி என்பதை நிரூபித்தது.

இதையும் படிங்க: மீண்டும் வங்கதேச அணியை சீண்டி தனது கருத்தினை தெரிவித்த சேவாக்.. என்ன இதெல்லாம் ? விவரம் இதோ

இத்தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து ஸ்மிருதி மந்தனா மொத்தம் 342 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற ஜெயா சர்மாவின் 21 சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னாள் இந்திய வீராங்கனை ஜெயா சர்மா 309 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -