வலுவான தென்னாப்பிரிக்காவுக்கே இந்த நிலைமையா? 83க்கு சுருட்டி ஓடவிட்ட இந்தியா.. மாபெரும் சாதனை வெற்றி

India beat RSA by runs in cwc2023
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 5ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நடத்தினர். புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்த வலுவான இந்த 2 அணிகள் மோதியது அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதில் டாஸ் வென்றாக இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான துவக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 40 (24) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில்லும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா மாஸ் வெற்றி:
அவர்களை தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் தென்னாப்பிரிக்க பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு மிடில் ஓவர்களில் அபாரமாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து 77 (87) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் 8, சூரியகுமார் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 10 பவுண்டரியுடன் 101* (121) ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சினின் சாதனை சமன் செய்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 19* (15) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 326/5 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் யான்சென், ரபாடா, மகாராஜ், லுங்கி, சம்சி தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 327 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே சிராஜ் வேகத்தில் டீ காக் 5 ரன்களில் போல்டாக அடுத்ததாக மறுபுறம் தடுமாறிய கேப்டன் பவுமா 11 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அதை விட அடுத்ததாக வந்த ஐடன் மார்க்கம் 9 ரன்களில் ஷமி வேகத்தில் அவுட்டாக அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிச் கிளாசின் ஜடேஜா சுழலில் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதனால் 40/4 என திண்டாடிய தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற வேண்டிய டுஷன் 13, டேவிட் மில்லர் 11 ரன்களில் ஜடேஜா மற்றும் ஷமியின் பந்துகளில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தனர். இறுதியில் யான்சென் 14 ரன்கள் எடுத்தும் 27.1 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 83 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இதையும் படிங்க: நான் பேட்டிங் பண்ண போது வந்த மெசேஜ் இதுதான். 49 ஆவது சதத்தில் உள்ள சீக்ரெட் குறித்து – விராட் கோலி பேட்டி

அதன் காரணமாக தொடர்ந்து 8வது வெற்றியை பதிவு செய்த இந்தியா புள்ளி பட்டியல் முதலிடத்தை தனதாக்கி சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்திலும் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் மெல்போர்ன் நகரில் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை தோற்கடித்ததே முந்தைய சாதனையாகும். மறுபுறம் தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிக ரன்கள் வித்யாசத்தில் தோற்று மோசமான சாதனை படைத்தது.

Advertisement