அண்டர்-19 உ.கோ : 81க்கு ஆல் அவுட்.. 214 ரன்ஸ்.. சூப்பர் 6இல் நியூஸிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா

IND vs NZ U19WC
- Advertisement -

தென்னாபிரிக்காவில் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான ஐசிசி உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் உதய் சஹரன் தலைமையிலான நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய லீக் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளை தோற்கடித்து சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய முதல் சூப்பர் 6 போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ப்ளூம்போய்ண்டீன் நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு அர்சின் குல்க்கர்னி 9 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த முஷீர் கான் மற்றொரு துவக்க துவக்க வீரர் ஆதர்ஷ் சிங்குடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

மெகா வெற்றி:
அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் ஆதர்ஷ் சிங் அரை சதமடித்து 52 ரன்களில் விட்டனர். அதை தொடர்ந்து வந்த கேப்டன் உதய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 ரன்களில் அவுட்டாக மறுபுறம் முசீர் கான் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் எதிர்புறம் ஆரவல்லி அவினாஷ் 17, பிரியான்சு மோலியா 10, சச்சின் தாஸ் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனாலும் ஒரு பக்கம் தொடர்ந்து நியூசிலாந்து பவுலர்களை அபாரமாக எதிர்கொண்ட முஷீர் கான் சதமடித்து 13 பவுண்டரி 3 சிக்சருடன் 131 (126) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடைய அசத்தலான ஆட்டத்தால் 50 ஓவர்களில் இந்தியா 295/8 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் ஜோன்ஸ் 0, ஜேம்ஸ் நெல்சன் 10, ஸ்நேகித் ரெட்டி 0, லச்லன் ஸ்டாக்போல் 5, கேப்டன் ஆஸ்கர் ஜான்சன் 19, ஓலிவர் திவாட்டியா 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: 7 ஓவருக்காக வேஸ்ட் பண்ணத்தீங்க.. சிராஜை ட்ராப் பண்ணிட்டு அவரை கொண்டு வாங்க.. பார்திவ் படேல் ஆலோசனை

அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு நியூசிலாந்தை தெறிக்கவிட்ட இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சௌமி பாண்டே 4, முசீர் கான் 2 மற்றும் ராஜ் லிம்பாணி 2 விக்கெட்களை எடுத்தனர். அதனால் 214 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பை 90% பிரகாசப்படுத்தியுள்ளது. குறிப்பாக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா அடுத்த போட்டியில் நேபாளை வீழ்த்தினால் அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement