7 ஓவருக்காக வேஸ்ட் பண்ணத்தீங்க.. சிராஜை ட்ராப் பண்ணிட்டு அவரை கொண்டு வாங்க.. பார்திவ் படேல் ஆலோசனை

Parthiv Patel 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசியில் இங்கிலாந்து நிர்ணயித்த 202 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

மறுபுறம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்ததை செய்து காட்டியுள்ள இங்கிலாந்து 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் போன்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

சிராஜை நீக்குங்க:
இதற்கிடையே கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் 2வது போட்டியில் விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. அதனால் 2வது போட்டிக்கான இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் வெறும் 7 ஓவர்களை (11) மட்டுமே வீசிய முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.

எனவே அவரை நீக்கி விட்டு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கலாம் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் ஆலோசனை கூறியுள்ளார். மேலும் சிராஜை விட பேட்டிங்கில் கணிசமான ரன்கள் எடுக்கக்கூடிய திறமையைக் கொண்டுள்ள குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “3 ஸ்பின்னர்கள் போதும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எனக்கு வேறு மாதிரியான கண்ணோட்டம் உள்ளது”

- Advertisement -

“முதல் போட்டியில் நீங்கள் சிராஜை 6 முதல் 7 ஓவர்கள் மட்டுமே பயன்படுத்தினீர்கள். அக்சர் படேல் பேட்டிங்கில் அசத்தக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் குல்தீப் யாதவுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டதாக ரோகித் சர்மா சொன்னார். எனவே சிராஜை நீங்கள் பெரிய அளவில் பயன்படுத்தவில்லையெனில் ஏன் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை பயன்படுத்தக் கூடாது”

இதையும் படிங்க: புதிய ப்ளேயர் தயார்.. 2வது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்த அவரை இறக்கப் போறோம்.. எச்சரித்த மெக்கல்லம்

“உங்களிடம் அஸ்வின், அக்சர் மற்றும் குல்தீப் ஆகிய 3 விதமான பவுலர்கள் இருப்பார்கள். அவர்களுடன் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை சேர்ப்பது பேட்டிங் வரிசையில் ஆழத்தை ஏற்படுத்தும். அது போன்ற சூழ்நிலையில் வெறும் 7 ஓவர்களை வீசுவதற்காக ஒருவரை நீங்கள் அணியில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை” என்று கூறினார். முன்னதாக முதல் போட்டியில் இங்கிலாந்து வெறும் 1 வேகப்பந்து வீச்சாளருடன் மட்டுமே களமிறங்கி வெற்றி கண்டது. எனவே சிராஜை நீக்கி பும்ராவை மட்டும் வைத்து 4 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கினால் வெற்றி கிடைக்கலாம்.

Advertisement