2வது டெஸ்டில் உங்களோட இடத்தை அவருக்கு தியாகம் பண்ணுங்க.. ரோஹித்துக்கு வாசிம் ஜாபர், சரந்தீப் அறிவுரை

Sarandeep Singh 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா பரிதாப தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

மறுபுறம் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்ப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள 2வது போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது.

- Advertisement -

தியாகம் பண்ணுங்க:
முன்னதாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் இத்தொடரின் முதல் போட்டியில் மோசமாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். எனவே அவரை நீக்கி விட்டு வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தரமான சுப்மன் கில் 3வது இடத்தில் விளையாடுவதை விட துவக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக செயல்படுவார் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

எனவே நீக்குவதற்கு பதிலாக ரோகித் சர்மா தம்முடைய ஓப்பனிங் இடத்தை அவருக்கு தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் 2வது போட்டியில் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். ரோகித் சர்மா 3வது இடத்தில் விளையாட வேண்டும். பேட்டிங் செய்வதற்காக காத்திருப்பது கில்லுக்கு உதவாது”

- Advertisement -

“எனவே அவர் துவக்க வீரராக களமிறங்குவது சிறந்த முடிவாக இருக்கும். மறுபுறம் ரோகித் சர்மா சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர். எனவே 3வது இடத்தில் விளையாடுவது அவருக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது” என்று கூறியுள்ளார். இதே கருத்தை மற்றொரு முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர் சரந்தீப் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: புதிய ப்ளேயர் தயார்.. 2வது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்த அவரை இறக்கப் போறோம்.. எச்சரித்த மெக்கல்லம்

“கில் 3வது இடத்தில் அசத்தக்கூடிய வீரர் அல்ல. அவர் ஓப்பனிங்கில் விளையாட வேண்டும். எனவே கில்லை டாப் இடத்தில் விளையாட விட்டு சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய ரோகித் சர்மா கீழ் வரிசையில் களமிறங்க வேண்டும்” என்று கூறினார். அவர்கள் கூறுவது போல இதற்கு முன் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கியே வெற்றிகரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement