- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மாஸ்டர்ஸ் லீக்: 6, 4, 4 சச்சினின் சூப்பர் க்ளாஸ்.. குர்கீரத், யுவ்ராஜ் அதிரடி.. இங்கிலாந்தை ஊதி தள்ளிய இந்தியா

இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 25ஆம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

அதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் இயன் மோர்கன் 14, முஸ்டர்ட் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் டிம் ஆம்ப்ரோஸ் 23, டேரன் மேடி 25, டிம் பிரேஸ்னன் 16 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னடைவை ஏற்படுத்தினர். இறுதியில் கிறிஸ் ட்ரெம்லெட் 16, ஸ்கோபீல்ட் 18* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் போராடி 132-8 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

சிறப்பான பவுலிங்:

இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக தவால் குல்கர்னி 3, அபிமன்யு மிதுன் 2, பவன் நெகி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக 133 ரன்களை துரத்திய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு குர்கீரத் சிங் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்புறம் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக ஸ்டீவன் பின் வீசிய 3வது ஓவரின் நான்காவது பந்தில் அற்புதமான கவர் டிரைவ் அடித்த அவர் டிம் பிரேஸ்னன் வீசிய 5வது ஓவரின் 2வது பந்தில் லெக் சைட் திசையில் சுழற்றி அபாரமான சிக்சரை பறக்க விட்டார். அடுத்த 2 பந்துகளிலும் லெக், ஆஃப் சைடு திசைகளில் அடுத்தடுத்த பௌண்டரிகளை பறக்க விட்ட சச்சின் 6, 4, 4 என அடுத்தடுத்த பௌண்டரிகளால் ரசிகர்களுக்கு விருந்து படைத்து மொத்தம் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 (21) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அவருடைய சூப்பர் கிளாஸ் நிறைந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை கொண்டு மகிழ்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் குர்கீரத் இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு அரை சதம் அடித்தார். அவருடன் அடுத்ததாக வந்த யுவ்ராஜ் சிங் தம்முடைய பங்கிற்கு 4 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 27* (14) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: இதுவே கோலின்னா கிங்குன்னு சொல்வீங்க.. கையில் மிராக்கிள் வெச்சுருக்கும் குலதீப்பை பாராட்டுங்க.. அஸ்வின் பேட்டி

இறுதியில் குர்கீரத் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 63* (35) ரன்கள் எடுத்த உதவியுடன் 11.4 ஓவரிலேயே இங்கிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா மாஸ்டர்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் சச்சின் தலைமையில் இத்தொடரில் அசத்துகிறது. அதன் காரணமாக செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகி வருகிறது.

- Advertisement -