- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காமன்வெல்த் கேம்ஸ் 2022 : வலுவான இங்கிலாந்தை திக்திக் கடைசி ஓவரில் சாய்த்த இந்தியா, பைனலுக்கு சென்றது எப்படி

ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிகரான அந்தஸ்து கொண்ட காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜூலை 29 முதல் துவங்கிய லீக் சுற்று போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தின. அதன் முடிவில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

அந்த நிலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடி சரவெடியாக பவுண்டரிகளை பறக்க விட மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட ஷபாலி வர்மா 76 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் 15 (17) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய பேட்டிங்:
அடுத்த ஓவரிலேயே 8 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 61 (32) ரன்களை 190.63 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட ஸ்மிருதி மந்தனா இந்தியாவுக்கு அபார தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகஸ் ஒருபுறம் ரன்களைக் குவிக்க மறுபுறம் கேப்டன் ஹர்மன்பிரீத் 20 (20) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய தீப்தி சர்மா தனது பங்கிற்கு போராடி 20 (22) ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத ரோட்ரிகஸ் 7 பவுண்டரியுடன் 44* (31) ரன்கள் குவித்து நல்ல பினிசிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 164/5 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரேயா கெம்ப் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட தொடக்க வீராங்கனை டுங்க்லி 19 (10) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய காப்சி 13 (8) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே 6 பவுண்டரியுடன் 35 (27) ரன்கள் எடுத்த நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திம் டேனியல் வைட்டும் அவுட்டானார். அதனால் அதிரடி காட்டினாலும் 9 ஓவரில் 81/3 என்ற தடுமாற்றம் தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் நட் ஸ்கீவர் – எமி ஜோன்ஸ் உடன் இணைந்து நங்கூரமாக பேட்டிங் செய்ய முயன்றார்.

திரில்லர் தருணங்கள்:
இருப்பினும் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீராங்கனைகளுக்கு எதிராக பவுண்டரிகள் அடிக்க முடியாத அவர்கள் ரன் ரேட்டை கட்டுக்குள் வைப்பதற்காக சிங்கிள், டபுள் எடுக்க முயன்றபோது ஜோன்ஸை 31 (24) ரன்களில் ராதா யாதவ் ரன் அவுட் செய்ய அடுத்த ஓவரிலேயே 2 பவுண்டரி 1 சிக்சருடன் 41 (43) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய கேப்டன் நட் ஸ்கீவரை இந்தியாவின் மந்தனா ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட இந்தியா ஒரு ஓவர் குறைவாக பந்து வீசியதை கண்டுபிடித்த நடுவர்கள் அதற்கு தண்டனையாக கடைசி ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே ஒரு இந்திய ஃபீல்டரை குறைத்தனர். அதனால் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையும் பரபரப்பும் ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய இந்திய வீராங்கனை ஸ்னே ராணா முதல் 2 பந்துகளில் 0, 1 ரன்கள் மட்டுமே கொடுத்து 3வது பந்தில் கேத்தரின் ப்ரண்டை டக் அவுட் செய்தார்.

மேலும் அடுத்த 2 பந்துகளில் 100 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் வெற்றி உறுதியானது. ஏனெனில் கடைசி பந்தில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது சோபி எக்லஸ்டன் அதிரடியான சிக்சரை பறக்க விட்ட போதிலும் இங்கிலாந்து 160/6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து இந்த காமன்வெல்த் இத்தொடரின் மாபெரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

பைனலில் இந்தியா:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கடைசி ஓவரை அசத்தலாக வீசிய ஸ்னே ராணா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் வரலாற்றில் முதல் முறையாக காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா முதல் முயற்சியிலேயே தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இதை தொடர்ந்து நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை வெல்வதற்காக போராட உள்ளது. ஒருவேளை அதில் தோற்றாலும் வெள்ளிப்பதக்கம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by