96க்கு வங்கதேசத்தை சுருட்டி வீசிய கிஷோர், சுந்தர்.. இந்தியா மாஸ் வெற்றி.. ஃபைனலில் பாகிஸ்தானுடன் மோதலா?

- Advertisement -

சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் காலிறுதியில் நேபாளை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு முகமத் ஹசனை 5 ரன்களில் தன்னுடைய சிறப்பான சுழலால் தமிழக வீரர் சாய் கிஷோர் அவுட்டாக்கிய நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் சைப் ஹசனை 1 ரன்னில் காலி செய்த மக்களுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதற்கடுத்ததாக வந்த ஜாகிர் ஹசனை அதே ஓவரில் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 21/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் ஹுசைன் எமோன் 23 (32) ரன்களில் திலக் வர்மா சுழலில் சிக்கினார்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அதனால் மேலும் தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாகிர் அலி 24* (29) ரன்கள் எடுத்தது தவிர்த்து அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் வங்கதேசம் 96/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் கிஷோர் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 97 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ருத்ராஜுடன் அடுத்ததாக வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 9.2 ஓவரிலேயே 97/1 ரன்கள் எடுக்க வைத்து இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

- Advertisement -

இதையும் படிங்க: உ.கோ வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கான்வே.. ரச்சினுடன் சேர்ந்து மொத்தம் 5 சரித்திர சாதனை

அதில் திலக் வர்மா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 55* (26) ரன்களும் ருதுராஜ் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40* (26) ரன்களும் அடித்து எளிதான வெற்றி கொடுத்தனர். அதன் காரணமாக அரையிறுதியிலும் அட்டகாசமான வெற்றி பெற்ற இந்தியா நாளை மதியம் 11.30 மணிக்கு நடைபெறும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தது. அதில் இன்று மதியம் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா தங்கப்பதக்கத்திற்காக மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement