219, 261க்கு ஆல் அவுட்.. 10 வருடம்.. ஆஸிக்கு எதிரான வரலாற்று அவமானத்தை உடைத்த இந்திய மகளிரணி.. சரித்திர வெற்றி

India Women
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இருப்பினும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக தகிலா மெக்ராத் 50, பெத் மூனி 40, கேப்டன் அலிசா ஹீலி 38 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பூஜா வஸ்திரகர் 4, ஸ்னே ராணா 3, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஷபாலி வர்மா 40 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அந்த நிலையில் வந்த சினே ராணா 9 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ரிச்சா கோஸ் 52, ஜெமிமா ரோட்ரிகஸ் 73 ரன்கள் குவித்து இந்தியாவை வலுப்படுத்தி அவுட்டானார்கள். அப்போது வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 0, யஸ்டிக்கா பாட்டியா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனாலும் 8வது இடத்தில் களமிறங்கிய தீப்தி சர்மா அபாரமாக விளையாடி 78 ரன்களும், 9வது இடத்தில் வந்த பூஜா வஸ்திரகர் முக்கியமான 47 ரன்களும் எடுத்ததால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 406 ரன்கள் குவித்து அசத்தியது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அஷ் கார்ட்னர் 4 விக்கெட்டுகளையும் கிம் கார்த், அனபெல் சதர்லாண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 2வது இன்னிங்ஸில் 261 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டகிலா மெகராத் 73, எலிஸ் பெரி 45 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 4, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 2, ராஜேஸ்வரி கைக்வாட் 2 விக்கெட்களை எடுத்தனர். இறுதியில் 75 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஸ்ம்ரிதி மந்தனா 38*, ரிச்சா கோஸ் 13, ஜெமிமா 12* ரன்கள் எடுத்து 8 வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் கழற்றி விடப்படும் அஸ்வின்? முதல் டெஸ்ட் மைதான பராமரிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்

இதன் வாயிலாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. இதற்கு முன் 6 ட்ரா 4 தோல்விகளை மட்டுமே பதிவு செய்து ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாமல் சந்தித்து வந்த அவமானத்தை இன்று ஒரு வழியாக இந்திய மகளிரணி உடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 வருடம் கழித்து முதல் முறையாக தோற்கடித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

Advertisement