90களில் நாங்கள் செய்த தவறை இப்போ இந்தியா திரும்ப திரும்ப செய்றாங்க – அணி நிர்வாகம் மீது முன்னாள் பாக் கேப்டன் அதிருப்தி

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணியினர் ஒரு வார ஓய்வுக்குப் பின் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா என கிட்டத்தட்ட அனைத்து சீனியர் வீரர்களும் ஓய்வெடுக்கும் இந்த தொடரில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அசத்திய ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Shardul-Thakur

- Advertisement -

அவரது தலைமையில் ராகுல் திரிபாதி முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இஷான் கிசான், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சிராஜ் போன்ற இளம் வீரர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சமீபத்திய தொடர்களில் காயத்தால் விலகிய தீபக் சஹர், குல்தீப் யாதவ் மற்றும் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

நிலையற்ற கேப்டன்கள்:
இப்படி இந்த வருடம் ஒவ்வொரு தொடரிலும் புதுப்புது கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வருடம் புத்தாண்டு துவங்கியதும் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் காயமடைந்த விராட் கோலிக்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அதன்பின் நடந்த 3-வது போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா வழிநடத்தினார்.

Rahul

அதன்பின் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ரோகித் சர்மா ஓய்வெடுத்ததால் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த அயர்லாந்து டி20 தொடரில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். அடுத்ததாக நடந்த இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் ரோகித் சர்மா விலகியதால் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தினார்.

- Advertisement -

பாகிஸ்தானின் தவறு:
அதன்பின் வெள்ளைப்பந்து தொடருக்கு ரோகித் சர்மா திரும்பிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இந்த வருடத்தின் 7-ஆவது கேப்டனாக செயல்பட்டார். இதனால் உலகிலேயே ஒரு காலண்டர் வருடத்தில் அதிக கேப்டன்களைக் கொண்ட அணி என்ற இலங்கையின் வித்தியாசமான சாதனையையும் இந்தியா சமன் செய்தது. ஆனால் இப்படி 7 மாதத்தில் 7 கேப்டன்கள் என்பது இந்திய அணிக்கு நிலையான ஒரு கேப்டன் கிடைக்காததை காட்டுவதாக நிறைய வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் நிலையாக ஒரு கேப்டன்கள் அமைந்தால் தானே அவரது தலைமையில் அனைவரும் செட்டிலாகி உலக கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல முடியும் என்று ரசிகர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

Rohit and Dhawan

இந்நிலையில் 90களில் இதேபோல் கேப்டன்களை அடிக்கடி மாற்றி அதனால் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் செய்த தவறை தற்போது இந்தியா மீண்டும் மீண்டும் செய்வதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்காக 6 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அனைவரும் பேக்-அப் வீரர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் தற்போது 7 பேக்-அப் கேப்டன்களை இந்த வருடத்தில் உருவாக்கியுள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வை இப்போது தான் நான் பார்க்கிறேன்”

- Advertisement -

“விராட் கோலி, கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் என அவர்கள் 90களில் பாகிஸ்தான் செய்த தவறை மீண்டும் மீண்டும் தற்போது செய்கிறார்கள். அவர்கள் தரமான ஓபனிங் பேட்ஸ்மேன் அல்லது மிடில் ஆர்டர் வீரர்களை கண்டறியாமல் கேப்டன்களை தேடிய முயற்ச்சியில் களமிறங்கி உள்ளார்கள்”

latif

“அவர்களுக்கு எந்த கேப்டனும் தொடர்ச்சியாக விளையாடுவதில்லை. கேஎல் ராகுல் தற்போது ஃபிட்டாக இல்லை, ரோகித் சர்மா இதற்கு முன் ஃபிட்டாக இல்லை, விராட் கோலி மனதளவில் ஃபிட்டாக இல்லை. இதை இந்திய அணி நிர்வாகம் கவனிக்க வேண்டும். அவர்கள் ஏராளமான கேப்டன்களை மாற்றி விட்டனர். அவர்களுக்கு சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற தரமான தலைவர் தேவைப்படுகிறது” என்று கூறினார்.

பொதுவாக ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான வீரர்களை தேடி அலையும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியா தேவையின்றி கேப்டன்களை தேடி அலைவதாக தெரிவிக்கும் ரசித் லதீப் சௌரவ் கங்குலி, எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்தியாவுக்கு ரோஹித் சர்மா போன்ற நிலையான ஒரு தலைமையிலான கேப்டன் தேவைப்படுவதால் அவருக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement