இந்தியாவின் புதிய ஜெர்ஸியை கிண்டலடித்த பாக் ரசிகர்கள் – பாக் ஜெர்ஸியை கலாய்த்து தள்ளும் இந்திய ரசிகர்கள்

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராகி வரும் உலகின் அனைத்து அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளன. மேலும் உலக கோப்பைக்கு இன்னும் 30 நாட்களுக்கு குறைவாக உள்ளதால் அதற்கு முன்பாக இறுதியாக சில இருதரப்பு தொடர்களில் அந்தந்த நாடுகள் விளையாடுகின்றன. அந்த வரிசையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பைனலுக்கு கூட செல்ல முடியாமல் பரிதாபமாக தோற்ற இந்தியா தனது தவறை திருத்திக் கொள்ள அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் களமிறங்குகிறது.

முன்னதாக இதுபோன்ற ஐசிசி உலகக் கோப்பைகள் நடைபெறும் போது அதில் தங்களது அணி வீரர்கள் அணிந்து விளையாடும் பிரத்தியேக புதிய ஜெர்சியை அந்தந்த அணி நிர்வாகங்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். பொதுவாகவே ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்ஸி ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்குவது வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் பல அம்சங்களில் ஒன்றாகும். அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அணிந்து விளையாடும் ஜெர்சியை பிசிசிஐ ஜெர்சி பார்ட்னரான எம்பிஎல் நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

- Advertisement -

பாக் ரசிகர்கள் கிண்டல்:
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை நீல நிறத்தை மையப்படுத்தி விதவிதமாக உருவாக்கப்பட்டு வரும் இந்திய ஜெர்சி இம்முறை வெளிர்மையான வானத்தின் ஊதா நிறத்தை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்திலும் முன்புறத்திலும் முழுமையாக வெளிர் ஊதா நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஜெர்ஸியில் முன்புறத்தில் லேசான அடர் ஊதா நிறத்தில் சில டிசைன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் தோள்பட்டை, கைகள் ஆகிய பகுதிகளில் வழக்கமான அடர் ஊதா நிறம் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் இடக்கையின் பக்கவாட்டுப் பகுதியில் பிசிசிஐ லோகோவில் இருக்கும் கதிர்களின் விளிம்பு சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முழுக்க முழுக்க கருமையான அடர் ஊதா நிறத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஜெர்சியை விட இம்முறை 2 வகையான வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஜெர்சி கண்களை கவரும் வகையில் இருப்பதால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியின் வரவேற்பும் தெரிவிக்கிறார்கள். ஆனால் சாதாரணமாகவே இந்தியாவுக்கு எதிராகப் பேசும் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியா அணிந்து விளையாடும் இந்த புதிய ஜெர்சியை வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். அதிலும் ஹேப்பிக் பாட்டில்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஊதா நிறத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலடித்தது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

சுமாரான பாக் ஜெர்ஸி:
அந்த நிலைமையில் இந்தியா ஜெர்சி வெளியிட்ட அடுத்த நாளன்று பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை வெளியிட்டது. வழக்கமான பச்சை நிறத்தை மையப்படுத்திய அந்த ஜெர்சியில் முன்புறத்தில் வெளிர் பச்சை நிறத்திலான அடர்ந்த கோடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சி நன்றாக இருந்தாலும் பாகிஸ்தானின் முந்தைய ஜெர்சியை விட சுமாராக இருப்பதாக பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது. அதைவிட தங்களுடைய ஜெர்சியை கிண்டலடித்த பாகிஸ்தான் தங்களைவிட சுமாரான ஜெர்சியை வடிவமைத்துள்ளதை பார்த்த இந்திய ரசிகர்கள் பதிலுக்கு சமூக வலைதளங்களில் வெறித்தனமாக கலாய்க்கிறார்கள்.

அதிலும் தர்பூசணி பழத்தின் மேற்புறம் எப்படி இருக்குமோ அதைப் பார்த்து அப்படியே காப்பியடித்து பாகிஸ்தானின் ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரசிகர்கள் கலாய்க்கின்றனர். சாதாரணமாகவே தங்களது நாட்டை விட்டுக் கொடுக்காமல் மோதிக்கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் இந்த ஜெர்ஸியிலும் தங்களது சண்டையையும் கிண்டல்களையும் தொடர்கிறார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இந்த புதிய ஜெர்சியை அணிந்துகொண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் தங்களது முதல் லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

இதையும் படிங்க : தன்னுடைய 71 சதங்கள் சாதனையை சமன் செய்து சச்சினை துரத்தும் கோலி பற்றி ரிக்கி பாண்டிங் பேசியது என்ன?

வரலாற்றில் தொடர்ச்சியாக உலகக்கோப்பையில் தோற்ற கதைக்கு கடந்த வருடம் துபாயில் முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தானை அதே துபாயில் சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியா தோற்கடித்தது. ஆனால் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. எனவே அந்த தோல்விக்கு மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement