
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது க்ரிஸ்ட் சர்ச் மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல்நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்டமான இன்று தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 53.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்திருந்தது. துவக்க வீரர் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு துவக்க வீரர் பிரதியூஷா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கோலி 3 ரன்களிலும், ரஹானே 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி தேனீர் இடைவேளைக்கு முன்னர் புஜாரா மற்றும் விகாரி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி நல்ல நிலையில் இருந்தது. ஆனால் விகாரி 55 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறியபோது ஆட்டம் தலைகீழாக மாறியது. 54வது ஓவர் வரை இந்திய அணி 194 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.
அப்பொழுது விஹாரி ஆட்டமிழக்க தேநீர் இடைவேளைக்கு பின்னர் புஜாரா ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து 63 ஓவர்களில் அதாவது அடுத்த 9 ஓவர்களில் மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இந்திய அணி முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. இந்திய அணி சார்பாக ப்ரித்வி ஷா, விஹாரி மற்றும் புஜாரா அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.