- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கருண் நாயர், ருதுராஜ் இஸ் பேக்.. இங்கிலாந்து லயன்ஸ் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற தொடர்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

அந்த தோல்விக்கு காரணமான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவை இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 3 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்தியா ஏ அணி:

அந்தப் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமைத் தாங்கும் அந்த அணியில் கருண் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016இல் அறிமுகமாகி முச்சதத்தை அடித்த நாளைடைவில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதுடன் ஐபிஎல் தொடரிலும் அசத்தினார்.

அதன் காரணமாக 2017க்குப்பின் இந்திய அணியை மீண்டும் நெருங்கும் வாய்ப்பை கருண் நாயர் பெற்றுள்ளார். அதே போல சமீப காலங்களில் கழற்றி விடப்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

3 போட்டிகள்:

இருப்பினும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதால் அவர்கள் 2வது பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணியுடன் இணைவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணி:
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் (துணை கேப்டன்), கருண் நாயர், நித்திஷ் ரெட்டி, இசான் கிசான், சர்துல் தாகூர், மாணவ் சுதர்

இதையும் படிங்க: இப்போ தோனியிடம் தான் ஸ்பார்க் இல்ல.. 2020இல் அவங்கள குறை சொன்னவர் 2026க்கு வரலாமா? டாம் மூடி

தானுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்சுல் கம்போஜ், கலீல் அஹ்மத், ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே. இதைத்தொடர்ந்து கேன்டர்பரி மற்றும் நார்த்தம்டன் நகரில் மே 30, ஜுன் 6 தேதிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ விளையாட உள்ளது. இறுதியாக 13ஆம் தேதி முதன்மை இந்தியா அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.

- Advertisement -