
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அதை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அவ்விரு போட்டிகளும் வரும் நவம்பர் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் கௌகாத்தி மைதானங்களில் நடைபெற உள்ளன.
அதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த 2 போட்டிகளும் அக்டோபர் 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ பயிற்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த 2 போட்டிகளில் விளையாடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி வெளிநாடுகளில் அட்டகாசமாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக கடந்த இங்கிலாந்து தொடரில் சதங்களை அடித்து அபாரமாக விளையாடிய அவர் 4வது போட்டியில் காயமடைந்து வெளியேறினார்.
அதனால் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடாத அவர் தற்போது குணமடைந்துள்ளார். எனவே இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கு முன் அவர் இத்தொடரில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக விளையாடி பயிற்சிகளை எடுக்க உள்ளார். அவரது தலைமையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.
அத்துடன் விக்கெட் கீப்பராக தமிழ்நாட்டின் ஜெகதீசன் வாய்ப்பு பெற்றுள்ளார். அதே போல இராணி கோப்பை மற்றும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட நாட்கள் கழித்து இந்தியா ஏ அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல், முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர்களும் 2வது போட்டியில் மட்டும் விளையாட உள்ளனர்.
முதல் போட்டிக்கான அணி: ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, நாராயன் ஜெகதீசன் (கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), ரஜத் படிடார், தேவ்தூத் படிக்கல், ஹர்ஷ் துபே, டானுஷ் கோட்டியான், மாணவ் சுதர், கலீல் அஹ்மத், குர்நூர் ப்ரார், அன்சுல் கம்போஜ், யாஷ் தாகூர், ஆயுஷ் படோனி, சரன்ஸ் ஜெய்ன்
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னாடி அவரை விளையாட வைக்கனும்.. அதுதான் கரெக்ட் – சீக்கா கருத்து
2வது போட்டிக்கான அணி: ரிஷப் பண்ட் (கேப்டன்), கேஎல் ராகுல் , துருவ் ஜுரேல் (கீப்பர்), சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தூத் படிக்கல், ருதுராஜ் கைக்வாட், ஹர்ஷ் துபே, டானுஷ் கோடியான், மாணவ் சுதர், கலீல் அஹ்மத், குர்னூர் ப்ரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமத் சிராஜ், ஆகாஷ் தீப்