ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னாடி அவரை விளையாட வைக்கனும்.. அதுதான் கரெக்ட் – சீக்கா கருத்து

Kris Srikkanth
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக மழையால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தாலும் அதிரடியாக விளையாட முடியாமல் இந்திய அணி தடுமாறியது அப்பட்டமாக தெரிந்தது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னதாக கே.எல் ராகுல் களமிறங்கனும் : சீக்கா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பேட்டிங் ஆர்டரில் ஏற்பட்ட சில மாற்றங்களும், முன்னணி வீரர்கள் ரன் குவிக்காததுமே காரணமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் இரண்டாவது போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியின் போது தோல்வியை சந்திக்க காரணமே மோசமான பேட்டிங் தான் என்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னதாக கே.எல் ராகுல் விளையாட வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை கே.எல் ராகுல் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாகவே பேட்டிங் செய்ய வேண்டும். ஏனெனில் அவரால் நிலைத்து நின்று ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும். அதனால் பேட்டிங் ஆர்டரும் பலப்படும்.

- Advertisement -

எனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னதாகவே கே.எல் ராகுலை விளையாட வைக்க வேண்டும். கடந்த போட்டியில் அக்சர் பட்டேலை ஐந்தாவது இடத்தில் களமிறக்கி விட்டு பின்னர் கே.எல் ராகுலை களமிறக்கினார்கள். இப்படி இறக்குவதெல்லாம் சரியான விடயம் கிடையாது.

இதையும் படிங்க : அந்த எல்லாத்தையும் சாதிச்ச கர்வம் இல்லாத விராட் கோலி.. 2027 உ.கோ வாய்ப்பை பிடிப்பாரு.. பாண்டிங் பேட்டி

என்னை பொருத்தவரை கே.எல் ராகுல் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வேண்டும் என கிருஷ்ணமாச்சரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது வரும் அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement