
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடர் செப்டம்பர் 30, அக்டோபர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. அத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார்கள். 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற திட்டமிட்டுள்ள அவர்களை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன பிசிசிஐ கழற்றிவிட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஏனெனில் 39, 40 வயதில் 2027 உலகக் கோப்பையில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
எனவே அவர்களை தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் அணியை உருவாக்க விரும்புவதாக செய்திகள் தெரிவித்தன. இருப்பினும் அதை பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா மறுத்தார். ஆனாலும் 2027 உலகக் கோப்பையில் விளையாட விராட், ரோஹித் உள்ளூரில் விளையாடி தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியமென்று நிறைய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.
அதனால் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இத்தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ ஒருநாள் தொடருக்காக இந்தியா ஏ அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட், ரோஹித் ஆகியோருடைய பெயர்கள் இல்லை. செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ரஜத் படிதார் தலைமையில் 13 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 2 போட்டிகளுக்கு திலக் வர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கான அணி: ரஜத் படிதார் (கேப்டன்), ப்ரப்சிம்ரான் சிங் (கீப்பர்), ரியன் பராக், ஆயுஷ் படோனி, சூர்யானிஷ் ஷேட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீட் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்ணோய், அபிஷேக் போரேல் (கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, சிமர்ஜீட் சிங்.
இதையும் படிங்க: 64/5 டூ 127 ரன்ஸ்.. பாகிஸ்தானை தெறிக்க விட்ட இந்தியா.. டெயில் எண்டரால் அவமானத்தை துடைத்த பரிதாபம்
2, 3வது போட்டிக்கான இந்திய அணி: திலக் வர்மா (கேப்டன்), ரஜத் படிதான்ர் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (கீப்பர்), ரியன் பராக், ஆயுஷ் படோனி, சூர்யானிஷ் ஷேட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீட் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்ணோய், அபிஷேக் போரேல் (கீப்பர்), ஹர்ஷிட் ராணா, அர்ஷிதீப் சிங்