- Advertisement -
இந்திய கிரிக்கெட்

211 ரன்ஸ் லீட்.. ஜெய்ஸ்வால், நிதிஷ், ஜுரேல் அதிரடி.. கடைசி நாளில் இங்கிலாந்து லயன்ஸை வெளுத்த இந்தியா ஏ

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடருக்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ 2 உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறது. தலா 4 நாட்களை கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது.

மே 30ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு துவக்க வீரர்கள் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8, ஜெய்ஸ்வால் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கருண் நாயர் – சர்பராஸ் கான் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தனர்.

- Advertisement -

இந்தியா ஏ அசத்தல்:

3வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சர்பராஸ் கான் 92 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் இங்கிலாந்து தொடரில் தன்னை தேர்ந்தெடுக்காத பிசிசிஐக்கு அவர் தக்க பதிலடியைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை நழுவ விட்டு 94 ரன்னில் ஃபெவிலியன் திரும்பினார்.

அவர்களுடன் சேர்ந்து மறுபுறம் அபாரமாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதத்தை அடித்து 204 ரன்கள் குவித்து அவுட்டானார். அதன் வாயிலாக 8 வருடங்கள் கழித்து கிவர் இந்திய அணியில் தமக்கான இடத்தை உறுதி செய்துள்ளார் என்றே சொல்லலாம். இறுதியில் சர்துள் தாக்கூர் 27, ஹர்ஷ் துபே 32, அன்சுல் கம்போஜ் 13, ராணா 16 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 557 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்தியா ஏ அதிரடி:

இங்கிலாந்து லயன்ஸ்க்கு அதிகபட்சமாக ஜமான் அக்தர், ஜோஸ் ஹல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் இந்தியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் சிறப்பாக பேட்டிங் செய்து 587 ரன்கள் குவித்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டாம் ஹெய்ன்ஸ் 171, மேக்ஸ் ஹோல்டன் 101, டான் மௌஸ்லி 113 ரன்கள் விளாசி சதத்தை அடித்தார்கள்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 ஃபைனலில் மழை வருமா? ரத்தானால் கோப்பை யாருக்கு? வெதர் ரிப்போர்ட் – ரூல்ஸ் இதோ

இந்தியா ஏ’வுக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, சர்துள் தாகூர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இந்தியா ஏ அணி கடைசி நாளில் அதிரடியாக விளையாடி 241/2 ரன்களை குவித்து 211 ரன்கள் முன்னிலை பெற்ற போது ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்திய அணிக்கு முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி 2 சிக்ஸ்டருடன் 64* (60) ரன்கள் குவித்தார். அவருடன் துருவ் ஜுரேல் 53* (53), நிதிஷ் ரெட்டி 52* (47), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 68 (87) ரன்கள் குவித்து இங்கிலாந்து லயன்ஸ்க்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -