- Advertisement -
இந்திய கிரிக்கெட்

242க்கு ஆல் அவுட்.. ஆஸியை சுருட்டி வீசிய இந்தியா ஏ.. ஸ்ரேயாஸ் தலைமையில் மெகா வெற்றி

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி கான்பூரில் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஓப்பனிங் ஜோடியாக விளையாடும் அவர்கள் இப்போட்டியில் இந்தியா ஏ அணிக்காக அபாரமாக பேட்டிங் செய்தனர். அதற்குத் தகுந்தார் போல் சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 135 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தது.

- Advertisement -

இந்தியா அபாரம்:

அதில் பிரப்சிம்ரன் அரை சதத்தை அடித்து 56 (53) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அசத்திய ஆரியா அரை சதத்தையும் அடித்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கும் அதிரடியாக விளையாடினார். எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய ஆர்யா சதத்தை அடித்து 11 பவுண்டரி 5 சிக்சருடன் 101 (84) ரன்கள் விளாசி அவுட்டானார்.

அடுத்து வந்த ரியன் பராக் மிகவும் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் 67 (42) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். எதிர்புறம் தொடர்ந்து அசத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் 75 பந்துகளில் சதத்தை அடித்தார். மொத்தம் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 110 (83) ரன்கள் விளாசிய அவர் 350 ரன்களை தாண்ட உதவிய பின் அவுட்டானார்.

- Advertisement -

மெகா வெற்றி:

இறுதியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய ஆயுஸ் பதோனி 50 (27) ரன்கள் எடுத்த இந்தியா ஏ அணி 413/6 ரன்களை குவித்து மிரட்டியது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக வில் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு அடித்து நொறுக்க முயற்சித்த ஜேக் பிரேசர்-மெக்குர்க் 23 (13) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த கூப்பர் கோன்லி 33 (21) ரன்களில் அவுட்டான நிலையில் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய ஹார்வி அரை சதமடித்து 68 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த லால்சன் ஷா 45 (32) ரன்கள் எடுத்த போதிலும் எதிர்ப்புறம் ஹாரி டிக்சன் 3, லியாம் ஸ்காட் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். லோயர் ஆர்டரில் கேப்டன் சதர்லேண்ட் 50 (33) ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை ரன்களை தாண்டவில்லை.

இதையும் படிங்க: இத்தனை வருஷம் ரவீந்திர ஜடேஜா இதை தொடர்ந்து செய்வதை பாக்க ஆச்சரியமா இருக்கு – சுப்மன் கில் பேட்டி

அதனால் 33.1 ஓவரில் ஆஸ்திரேலியா ஏ அணியை 242 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்தியா ஏ 171 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக நிசாந்த் சிந்து 4, ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -