- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023 உலக கோப்பைக்கு பிசிசிஐ தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள உத்தேச 20 இந்திய வீரர்களின் பட்டியல்

கோலாகலமாக துவங்கியுள்ள 2023 புத்தாண்டில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட உள்ளது. அதிலும் குறிப்பாக 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் கதைக்கு சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் எப்போதுமே சொந்த மண்ணில் வழுவானாக அணியாக கருதப்படும் இந்தியா கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது.

எனவே இந்த பொன்னான வாய்ப்பில் கோப்பையை வெல்ல தயாராகும் இந்திய அணிக்காக விளையாடப்போகும் உத்தேச 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று பிசிசிஐ அறிவித்தது. இவர்களுக்கு அடுத்த 10 மாதங்களுக்குள் சுழற்சி முறையில் வாய்ப்பளித்து அதில் சிறந்த வீரர்களை இறுதி கட்டணியில் தேர்வு செய்ய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ரோஹித் சர்மா: ஒரு காலத்தில் ஹிட்மேன் என்று பெயரெடுத்த இவர் சமீப காலங்களில் தடுமாறினாலும் 2023 உலகக்கோப்பையில் சந்தேகமின்றி கடைசி வாய்ப்பாக கேப்டனாகவும் வழக்கமான தொடக்க வீரராகவும் செயல்படுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இஷான் கிசான்: சமீபத்திய வங்கதேச தொடரில் அதிவேகமாக இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக இரட்டை உலக சாதனைகளை படைத்த இவர் நேரடியாக ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். மேலும் ராகுல்/கில் – ரோஹித் ஆகியோரை விட ரோகித் – இஷான் எனும் ஜோடி எதிரணியை திணறடிக்கும் வலது இடது கை ஜோடியாக உள்ளது. அது போக இவர் விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதால் பல வகையில் இந்திய அணிக்கு பயனளிப்பார்.

- Advertisement -

3. சுப்மன் கில்/ஷிகர் தவான்: 3வது பேக் அப் தொடக்க வீரராக 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காகவும் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் தொடக்க வீரராக தேர்வு செய்யப்படுவார்.

மேலும் மிஸ்டர் ஐசிசி என பெயரெடுத்து சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட சிகர் தவான் ஒருவேளை 2023 ஐபிஎல் தொடரில் அசத்தும் பட்சத்தில் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அவரை விட இளமையுடன் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் கில் தான் அந்த இடத்துக்கு முன்னிலையில் உள்ளார்.

- Advertisement -

4. விராட் கோலி: 3வது இடத்தில் சந்தேகமின்றி கடந்த 15 வருடங்களாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் நிச்சயமாக விளையாடுவார். அதிலும் 2022இல் ஃபார்முக்கு திரும்பி டி20 உலக கோப்பையில் மிரட்டிய அவர் ஒருநாள் போட்டிகளிலும் சதமடித்து பார்முக்கு திரும்பியுள்ளதால் யாரும் புறக்கணிக்க முடியாது.

5. சூரியகுமார் யாதவ்: 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேனாக தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் அபாரமாக செயல்பட்டு தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் இவர் விளையாடுவதில் சந்தேகமில்லை.

- Advertisement -

6. ஸ்ரேயாஸ் ஐயர்: 5வது இடத்தில் சந்தேகமின்றி 2022 ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்த இவர் நிச்சயமாக விளையாடுவார்.

7. ரிஷப் பண்ட்: ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த வருடம் முதல் முறையாக சதமடித்து சாதிக்க முடியும் என்று நிரூபித்த அவர் உலக கோப்பைக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் காயத்திலிருந்து குணமடைந்து திரும்புவார் என்று நம்பலாம்.

8. சஞ்சு சாம்சன்: 2022இல் கிடைத்த வாய்ப்பில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் சாதிக்க முடியும் என்று நிரூபித்த இவர் பினிஷராகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

9. கேஎல் ராகுல்: ஒரு கட்டத்தில் துணை கேப்டனாக இருந்த இவர் சமீப கால சொதப்பல்களால் தற்போது பேக்அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

10. ஹர்டிக் பாண்டியா: இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராகவும் துணை கேப்டனாகவும் சந்தேகமின்றி இவர் விளையாட உள்ளார்.

11. ரவீந்திர ஜடேஜா: முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் இவரும் நிச்சயமாக காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார் என்று நம்பலாம்.

13. வாஷிங்டன் சுந்தர்/அக்சர் படேல்: 2வது சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அக்சர் படேலும் தேர்வாக 50 – 50% வாய்ப்புள்ளது. இதில் அடுத்து வரும் தொடர்களில் யார் அசத்துகிறார்களோ அவர்களுக்கு ஜாக்பாட் இடம் காத்திருக்கிறது.

14. யுஸ்வென்ற சஹால்: முதன்மை ஸ்பின்னராக 2022 டி20 உலக கோப்பையில் செய்த தவறு போல் அல்லாமல் ரிஸ்ட் ஸ்பின்னரான இவர் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

15. குல்தீப் யாதவ்: 2வது ஸ்பின்னராக அவருடைய ஜோடியான இவர் விளையாட வாய்ப்புள்ளது. 2019இல் வெற்றிகரமாக செயல்பட்ட இந்த குல்ச்சா ஜோடியை மீண்டும் இந்த உலக கோப்பையில் பார்க்கலாம்.

16. முகமது ஷமி: டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் இவர் உலக கோப்பையில் நிச்சயமாக ஒரு வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார்.

17. புவனேஸ்வர் குமார்: அதே போல டி20 கிரிக்கெட்டில் திண்டாடும் இவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் அடுத்து வரும் தொடர்களில் இவர் சோதிக்கப்பட்டு அதில் அசத்தினால் மட்டுமே உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

18. முகமது சிராஜ்: 2022 ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த இவர் நிச்சயமாக உலகக் கோப்பையில் விளையாடுவதை பார்க்க முடியும்.

19. ஜஸ்பிரித் பும்ரா: சந்தேகமின்றி காயத்திலிருந்து குணமடைந்து வரும் இவர் கண்டிப்பாக உலக கோப்பையில் முதன்மை பவுலராக விளையாடுவார்.

இதையும் படிங்கபோட்டியின் போது பண்டிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து கூறிய ரசிகர்கள். இஷான் கிஷன் கொடுத்த ரியாக்சன்

20. உம்ரான் மாலிக்: 2022 டி20 உலகக் கோப்பையில் இவரை இந்தியா தவற விட்டு விட்டதாக நிறைய வெளிநாட்டு ஜாம்பவான்கள் விமர்சித்தனர். அதனாலேயே சமீபத்திய நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் அடுத்து வரும் தொடர்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தும் பட்சத்தில் உலகக்கோப்பை அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது.

- Advertisement -