போட்டியின் போது பண்டிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து கூறிய ரசிகர்கள். இஷான் கிஷன் கொடுத்த ரியாக்சன்

Ishan-Kishan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து அனைவரது மத்தியிலும் பெரிய அளவு வருத்தத்தை ஏற்படுத்தியதோடு அவருக்கான பிரார்த்தனைகளும் தற்போது குவிந்து வருகிறது. அதுகுறித்த செய்திகளே தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் தனக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுவர கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை ஆகும் என்பதனால் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை என முக்கியமான தொடர்களை அவர் தவறவிட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த விபத்து குறித்து அறிந்த பலரும் தங்களது வருத்தங்களை சமூக வலைதளத்தின் மூலம் பகிர்ந்து வரும் வேளையில் சில வீரர்களுக்கு ரிஷப் பண்டின் விபத்து குறித்த செய்தியே தெரியாமல் இருந்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் ரஞ்சி தொடர் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான இஷான் கிஷான் ரிஷப் பண்டிற்கு விபத்து ஏற்பட்ட அன்றைய நாளில் ரஞ்சிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனால் அவருக்கு ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியது குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த போட்டியின் போது இடைவெளி நேரத்தில் ரசிகர்களிடம் சென்று அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் ரிஷப் பண்டிற்கு ஆக்சிடென்ட் நடந்து விட்டது என்று இஷான் கிஷனிடம் கூறுகிறார். அப்போது சற்று பதட்டம் அடைந்த அவர் :

- Advertisement -

உடனடியாக ரசிகரிடம் அவருக்கு என்ன ஆச்சு? பெரிய காயம் ஒன்றும் இல்லையே? அவர் சீரியஸாக இருக்கிறாரா? என்றெல்லாம் பதட்டமாக கேட்கிறார். அதற்கு பதில் அளித்த ரசிகர்கள் கூறுகையில் : அவருக்கு கொஞ்சம் பெரிய அடி தான். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். மேட்ச்சில் முழு கவனம் செலுத்துங்கள் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : IND vs SL : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இப்படி ரிஷப் பண்டின் விபத்து குறித்த தகவல் கேட்டதுமே பதட்டம் அடைந்து முகம் மாறியபடி வருத்தத்துடன் அவர் ரிஷப் பண்ட் குறித்து ரசிகர்களிடம் விசாரித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement