IND vs SL : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Hardik Pandya Bowling
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை ஜனவரி 3-ஆம் தேதி முதல் துவங்குகிறது. அதன்படி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது.

IND vs SL

- Advertisement -

இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் உத்தேச அணியை காணலாம். இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணியே இந்த டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்று தெரிகிறது.

Ishan-Kishan

அதேபோன்று மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவும், நான்காவது இடத்தில் சஞ்சு சாம்சனும், ஐந்தாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும் விளையாடுவது உறுதி. ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஆறாவது இடத்தில் தீபக் ஹூடா அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவர் விளையாட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஏழாவது இடத்தில் அக்சர் பட்டேல் விளையாடுவார். மீதமுள்ள நான்கு பந்துவீச்சாளர்களின் இடத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுவார்கள். சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி நாளைய முதல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs SL : இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்களின் பட்டியல்

1) இஷான் கிஷன், 2) ருதுராஜ் கெய்க்வாட்/சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) சஞ்சு சாம்சன், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா/வாஷிங்க்டன் சுந்தர், 7) அக்சர் பட்டேல், 8) ஹர்ஷல் படேல், 9) உம்ரான் மாலிக், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement