இன்றைய போட்டி நடைபெறும் ராய்ப்பூர் மைதானத்தில் உள்ள குறை – போட்டியின் இடையே சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு

Raipur
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்த வேளையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-ஆவது டி20 போட்டியானது டிசம்பர் 1-ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது.

அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்க உள்ள வேளையில் அந்த மைதானத்தில் இருக்கும் ஒரு குறை தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது. அந்த வகையில் இந்த மைதானத்தில் சில பகுதிகளில் மின்சார வசதி கிடையாது என்றும் அதனால் போட்டியின் இடையே பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே மின்சார கட்டணத்தை பாக்கி வைத்திருக்கும் இந்த மைதானம் 3 கோடியே 16 லட்சம் ரூபாய் வரை மின்சார பணத்தை கட்டண பாக்கியாக வைத்துள்ளதால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மைதானத்தின் ஒரு சில பகுதிகளில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஜெனரேட்டர் மூலம் தான் மின்விளக்குகள் இயக்க முடியும் என்றும் அப்படி ஜெனரேட்டர் மூலமாகவே போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலில் : சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் கொடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில் 200 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் போட்டி எந்த பிரச்சினையும் இன்றி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தோனி இல்லனா யாருமே சிஎஸ்கே மேட்ச்ச பாக்க மாட்டாங்க.. முன்னாள் சென்னை வீரர் பேட்டி

இருப்பினும் ஒருவேளை மின்சாரத்தினால் போட்டியின் இடையே பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச போட்டிகள் நடைபெறும் ஒரு மைதானத்தில் இப்படி மின்சார பாக்கி காரணமாக மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement