IND vs WI : டி20 தொடரை வெல்லப்போவது யார், முன்னோட்டம், வரலாற்று புள்ளிவிவரம் – அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த வீரர்களின் பட்டியல்

INDvsWI
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனையுடன் இந்தியா கோப்பையை முத்தமிட்டது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 28-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

முன்னோட்டம்:
வெஸ்ட் இண்டீஸ்: சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் புதிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் தலைமையில் முதல் 2 போட்டிகளில் கடைசி கட்ட ஓவர்களில் சொதப்பி அடுத்தடுத்த நெஞ்சை உடைக்கும் தோல்விகளை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி போட்டியில் படு மோசமான தோல்வியை சந்தித்தது.

விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணியிடம் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய அந்த அணி டி20 தொடரில் தங்களுக்கு மிகவும் பிடித்த அதிரடி எனும் ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன் தலை நிமிர போராட உள்ளது. மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சொதப்பினாலும் டி20 என்று வந்தால் 11-வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் கூட சரவெடியாக பேட்டிங் செய்யும் திறமை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் நிச்சயமாக இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று நம்பலாம்.

Shikhar Dhawan Team India

இந்தியா: ஏற்கனவே ஒருநாள் தொடரில் பெற்றுள்ள வைட்வாஷ் வெற்றியால் புத்துணர்ச்சியுடன் காணப்படும் இந்திய அணியில் ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முக்கிய வீரர்கள் டி20 தொடருக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

அதனால் முன்பைவிட மேலும் பலம் அடைந்துள்ள இந்தியா சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து உலகின் நம்பர்-1 டி20 அணியாக வெற்றிநடை போட்டு வருகிறது. எனவே தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து இந்த டி20 தொடரையும் கைப்பற்ற இந்தியா போராடும் என்று உறுதியாக நம்பலாம்.

INDvsWI

புள்ளிவிவரங்கள்:
1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 13 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டிகளில் மட்டும் வென்றது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. இருப்பினும் இத்தொடர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணியை 4 போட்டிகளில் எதிர்கொண்ட இந்தியா 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

Ind-vs-Wi

3. ஆனால் இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 11 போட்டிகளில் இந்தியா 10 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது.

- Advertisement -

4. மேலும் வெஸ்ட் இண்டீஸ் இதற்குமுன் 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த 1 போட்டி கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இருப்பினும் 2019இல் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது.

ரன்கள் – விக்கெட்கள்:
இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுவதால் அது சம்பந்தப்பட்ட பேட்டிங் பவுலிங் புள்ளி விவரங்கள் பற்றி பார்ப்போம்:
1. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. சுரேஷ் ரெய்னா : 221 (6 இன்னிங்ஸ்)
2. விராட் கோலி : 112 (3 இன்னிங்ஸ்)
3. ரோகித் சர்மா : 110 (3 இன்னிங்ஸ்)

2. கடந்த 2010 டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சதமடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டுமே அங்கு அதிகபட்சமாக தலா 1 அரை சதங்கள் அடித்துள்ளார்கள்.

INDvsWI

3. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 இந்திய பந்துவீச்சாளர்களாக ஆசிஸ் நெஹ்ரா (10), யூசுப் பதான் (4), தீபக் சஹர் (3), பிரவீன் குமார் (3) ஆகியோர் உள்ளனர்.

4. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இதுவரை எந்த இந்திய பவுலரும் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. மேலும் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பந்துவீச்சாளர், தீபக் சஹர் : 3/4, கயானா, 2019

இதையும் படிங்க:

5. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு போட்டியில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 190/6, ஜமைக்கா, 2017. குறைந்தபட்ச ஸ்கோர் : 150, கயானா, 2019

Advertisement