- Advertisement -
இந்திய கிரிக்கெட்

INDvsWI : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர் போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி நாளை மறுதினம் முதல் நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதன்படி தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பற்றியும், எந்த சேனலில் இந்த போட்டிகளை கண்டுகளிக்கலாம்? எந்த நேரத்தில் போட்டிகளைக் கண்டு களிக்கலாம் என்பது குறித்த பதிவை நாங்கள் உங்களுக்கு இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணி அளவில் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

3 ஒருநாள் போட்டிகளும் அதே மைதானத்தில் அதே நேரத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இரவு 7 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்துமே ஸ்டார்ஸ் போர்ட்ஸ் குழுமத் தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம். தமிழ் ரசிகர்கள் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தமிழிலும் போட்டியை கண்டு களிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

அதுமட்டுமின்றி டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் இல் போட்டு நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சைனி ஆகியோர்க்கு கொரோனா ஏதொற்று ற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதால் அவர்களை தவிர்த்து மீதமுள்ள வீரர்களை வைத்து இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் வார்னர் 4 கோடிகளுக்கு மேல் போகமாட்டார் – ஆஸி முன்னாள் வீரர்

இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ : ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிகார் தவான், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்க்டன் சுந்தர், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், தீபக் சாகர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

- Advertisement -
Published by