ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் வார்னர் 4 கோடிகளுக்கு மேல் போகமாட்டார் – ஆஸி முன்னாள் வீரர்

warnerfier
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் எல்லாம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. மொத்தம் 590 வீரர்கள் பங்குபெறும் இந்த மெகா ஏலத்தில் தரமான வீரர்களை பல கோடி ரூபாய்கள் செலவு செய்து விலைக்கு வாங்க 10 அணிகளும் தயார் நிலையில் உள்ளதால் இந்த ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Ipl cup

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் வெளிநாடுகளில் இருந்து அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 47 வீரர்கள் போட்டி போட உள்ளார்கள். இந்த 47 வீரர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதால் அவர் பல கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் டேவிட் வார்னர்:
ஏனென்றால் கடந்த பல சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வந்த அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு கடந்து 2015 முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இதுவரை 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

David warner

இருப்பினும் கடந்த 2021 சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் சொதப்பிய அவரை கேப்டன் பதவியிலிருந்து பாதியிலேயே நீக்கிய ஹைதராபாத் நிர்வாகம் அதன்பின் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து வெளியேற்றி அவமானப் படுத்தியது. இதனால் மனமுடைந்த அவர் அந்த அணியில் இருந்து விலகி தற்போது ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்று புதிய அணிக்காக விளையாட தயாராகியுள்ளார்.

- Advertisement -

4 கோடிகளுக்கு மேல் நோ:
இந்நிலையில் ஐபிஎல் 2022 மெகா இடத்தில் 4 கோடிகளுக்கு மேல் டேவிட் வார்னர் விலை போக மாட்டார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக அனைத்து 10 அணிகளும் முகமத் ஷமியை 5 கோடிகள் வரை வாங்க போட்டி போடுவார்கள் என நம்புகிறேன். ஆனால் டேவிட் வார்னர் 4 கோடிகளுக்கு மேல் விலைபோவார் என எனக்கு தோன்றவில்லை” என கூறியுள்ளார்.

hogg

அவரின் இந்த கருத்து பல ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ஐபிஎல் 2021 தொடரில் அவர் மோசமாக செயல்பட்டாலும் அதன்பின் துபாயில் நடந்த ஐசிசி டி20 உலககோப்பையில் 2021 தொடரில் 289 ரன்கள் குவித்து வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா ஒரு டி20 உலகக் கோப்பையை கையிலேந்த முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக அந்த டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன் தற்போது பேட்டிங்கில் நல்ல பார்ம்க்கும் திரும்பியுள்ளார். இதனால் அவரின் மவுசு முன்பை விட கூடியுள்ளதே தவிர குறையவில்லை என்பதே உண்மையாகும்.

கேப்டனாவரா வார்னர்:
அத்துடன் பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் கேப்டன்கள் இல்லாமல் தடுமாறி வருகின்றன. எனவே ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஒரு வெற்றிகரமான கேப்டனாக அனுபவம் கொண்ட டேவிட் வார்னரை எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் வாங்க சில அணிகள் தயாராக உள்ள நிலையில் பிராட் ஹாக் கூறியுள்ள இந்த கருத்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

hogg 1

மேலும் இந்த ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு விலைக்கு போவார் என்ற கருத்துக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “ரவிச்சந்திரன் அஸ்வின் கச்சிதமாக பந்துவீசிய கூடியதுடன் லோயர் ஆர்டரில் கணிசமாக பேட்டிங் செய்ய கூடியவர். கடந்த வருடம் அவர் பெரிய அளவில் விக்கெட்களை எடுக்கவில்லை என்றாலும் 5 – 7 கோடிகளுக்கு ஏலம் போவார் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement