இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் டி20 தொடர் : ஈடன் கார்டன்ஸ் மைதான வரலாறு – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

MCG Ground
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

SKY

- Advertisement -

இதை தொடர்ந்து இந்த 2 அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரை போல இந்த தொடரையும் வென்று சொந்த மண்ணில் வெற்றி நடை போட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவும் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு இந்த டி20 தொடரில் பதிலடி கொடுக்க வெஸ்ட்இண்டீஸ் அணியும் போராடும் என்பதால் இந்த தொடரில் அனல் பறக்கும் என நம்பலாம்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்:
ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டி20 தொடர் முழுவதும் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளிலுமே ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், கிரண் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர் என மெகா சிக்ஸர்களை பறக்கவிடக்கூடிய அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இவர்கள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிவார்கள் என எதிர்பார்க்கலாம்.

INDvsWI

இருப்பினும் அகமதாபாத் நகரில் நடந்த ஒருநாள் தொடரை போலவே கொல்கத்தாவில் நடைபெறும் இந்த டி20 தொடரை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரியவருகிறது. இருப்பினும் இந்த தொடர் முழுவதையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் நேரடியாக கண்டு களிக்கலாம்.

- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ்:
இந்த டி20 தொடர் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் இந்தியாவில் இருக்கும் மற்ற மைதானங்களை விட மிக மிகப் பழமையானதாகும். கடந்த 1864ஆம் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் கடந்த 1934 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 66,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய இந்த மைதானத்தில் கடந்த 2011 முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Eden Gardens

1. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

2. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் இந்தியா இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த 2011இல் இங்கிலாந்துக்கு எதிரான 1 போட்டியில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

IND

3. இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதற்கு முன் 1 போட்டியில் மோதியுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிக ரன்கள்:
இம்மைதானத்தில் அதிக டி20 ரன்கள் குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்லன் சாமுவேல்ஸ் 85 ரன்களுடன் (1 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 72 ரன்களை (3 இன்னிங்ஸ்) குவித்துள்ளார். இங்கு இதுவரை எந்த ஒரு வீரரும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rohith-1

அதிக விக்கெட்கள்:
இந்த மைதானத்தில் அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளராக கார்லஸ் ப்ரத்வைட் 5 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே போல் இங்கு அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர்களாக அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர்: 184/7, நியூஸிலாந்துக்கு எதிராக, 2021.

IND

வெதர், பிட்ச் ரிப்போர்ட்:
இந்த கொல்கத்தா நகரில் முதல் போட்டி மட்டுமல்லாது இந்த தொடர் நடைபெறும் 3 நாட்களும் மழைக்கான வாய்ப்புகள் இல்லை. ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பொறுத்த வரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று சவாலை சந்திக்க கூடும். அத்துடன் இந்தப் போட்டி இரவு நேரத்தில் நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 8 போட்டிகளில் 5 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 148 ஆகும்.

Advertisement