IND vs WI : தொடரை வெல்லப்போவது யார், முன்னோட்டம், அதிக ரன்கள், விக்கெட்கள் – வரலாற்று புள்ளிவிவரஙங்கள்

INDvsWI
- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். அவரது தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா அதற்கேற்ற தரத்துடன் கூடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.

dhawan

- Advertisement -

முன்னோட்டம்:
இந்த தொடரில் என்னதான் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் ஷிகர் தவான் தலைமையில் சூரியகுமார் யாதவ், இஷான் கிசான், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, சஹால், அர்ஷிதீப் சிங் என தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைக்கும் அளவுக்கு தரத்தில் பஞ்சமில்லாத வீரர்கள் இந்திய அணியில் நிறைந்து இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தென், ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய தொடர்களில் விளையாடி நல்ல பார்மிலும் உள்ளனர்.

குறிப்பாக வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த புத்துணர்ச்சியுடன் இந்தியா தெம்பாக உள்ளது. மறுபுறம் நிக்கோலஸ் பூரன் தலைமையில் புதிய பயணத்தை துவங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கடந்த வாரம் கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கிலும் டி20 தொடரை 2 – 0 (3) என்ற கணக்கிலும் வென்றது. ஆனால் ஒருநாள் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் ரொம்பவே பலவீனமாக காட்சியளிக்கும் அந்த அணியை மிகச் சிறப்பாக செயல்பட்டு தோற்கடிக்க இந்தியா போராட உள்ளது.

IND vs ENG TEam INDIA

இருப்பினும் வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரில் தோற்றாலும் அதற்காக துவளாமல் ரோவ்மன் போவல், ஜேசன் ஹோல்டர், ஷை ஹோப் போன்ற நல்ல தரமான மற்றும் இளம் வீரர்களை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் சொந்தமண் சாதகத்தை பயன்படுத்தி தேவையான அளவு பலமுள்ள இந்தியாவை தோற்கடித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர தயாராகியுள்ளது.

- Advertisement -

புள்ளிவிவரங்கள்:
1. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இதுவரை 136 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 67 போட்டிகளில் வென்று இந்தியா முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 63 போட்டிகளில் வென்றது. 2 போட்டிகள் டையில் முடிந்தன. 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

2. குறிப்பாக போட்டி நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இவ்விரு அணிகளும் வரலாற்றில் 39 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 20 போட்டிகளில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் வலுவான அணியாக உள்ளது. இந்தியா 16 போட்டிகளில் வென்றுள்ளது. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. ஆனால் கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 ஒருநாள் தொடர்களிலும் இந்தியாவே வென்று வலுவான அணியாக உள்ளது.

- Advertisement -

அதிக ரன்கள்:
இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுவதால் அது சம்பந்தப்பட்ட பேட்டிங் மற்றும் பந்து வீச்சு புள்ளி விவரங்களைப் பார்ப்போம்:
1. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல்:
1. விராட் கோலி : 790 (14 இன்னிங்ஸ்)
2. எம்எஸ் தோனி : 458 (13 இன்னிங்ஸ்)
3. யுவராஜ் சிங் : 419 (12 இன்னிங்ஸ்)
4. ரோகித் சர்மா : 406 (12 இன்னிங்ஸ்)
5. ஷிகர் தவான் : 348 (13 இன்னிங்ஸ்)

INDvsWI

2. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். வரலாற்றில் அவரை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 2 சதங்கள் கூட அடித்தது கிடையாது.

- Advertisement -

3. அதேபோல் தலா 4 அரைச் சதங்களுடன் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிக அரை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களாக முதலிடத்தில் உள்ளனர். இருப்பினும் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங் : 131, கிங்ஸ்டன், 2009

INDvsWI

4. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்கள்:
1. அஜித் அகர்கர் : 15 (8 இன்னிங்ஸ்)
2. ஹர்பஜன்சிங் : 13 (14 இன்னிங்ஸ்)
3. உமேஷ் யாதவ் : 13 (6 இன்னிங்ஸ்)

5. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இதுவரை எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : ICC தரவரிசை : இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பும்ரா! முதலிடத்தில் யார்? – எத்தனை புள்ளி வித்தியாசம்?

6. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 339/6, கிங்ஸ்டன், 2009. குறைந்தபட்ச ஸ்கோர் : 123 ஆல்-அவுட்.

Advertisement