ICC தரவரிசை : இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பும்ரா! முதலிடத்தில் யார்? – எத்தனை புள்ளி வித்தியாசம்?

Jasprit Bumrah
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு பின்னர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன், பவுலர்கள் மற்றும் அணிகள் என அனைத்து வகையான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் வழக்கம். அந்த வகையில் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள தொடர்களின் அடிப்படையில் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

அந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆறு விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியிருந்தார்.

அந்த அசத்தலான ஆட்டத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து சமீபத்தில் வெளியான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய தரவரிசை பட்டியலில் அவரை முந்தி நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் முதலிடத்தில் பிடித்துள்ளார்.

boult

இந்த தரவரிசை பட்டியலில் ட்ரென்ட் போல்ட் 704 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா 703 புள்ளிகள் உடன் அவரைவிட ஒரு புள்ளி வித்தியாசம் மட்டுமே பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : IND vs WI : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸும் இல்ல.. சோனியும் இல்ல – எந்த சேனலில் போட்டியை பார்க்கலாம்?

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முஜிபுர் ரஹ்மான் ஐந்தாவது இடத்திலும், 8 ஆவது மற்றும் 9 ஆவது இடத்தில் முகமது நபி மற்றும் க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement