IND vs WI : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸும் இல்ல.. சோனியும் இல்ல – எந்த சேனலில் போட்டியை பார்க்கலாம்?

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் நடைபெற உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த தொடரும் மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்க காத்திருக்கிறது. அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதை அடுத்து நேரடியாக இங்கிலாந்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

INDvsWI

- Advertisement -

அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த ஒருநாள் தொடரில் முற்றிலும் இளம் வீரர்களே விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூலை 22-ஆம் தேதி நாளை துவங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளும் டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேபோன்று இந்த மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

DD Sports

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை எந்த குழுமம் வாங்கியுள்ளது? எந்த சேனலில் இந்த ஒருநாள் தொடரானது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதன்படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை டிடி ஸ்போர்ட்ஸ் வாங்கியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி அல்லது வேறு எந்த சேனலிலும் பார்க்க முடியாது. இந்திய ரசிகர்கள் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த ஒருநாள் தொடரை நேரடியாக இலவசமாக கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : ஒரு இடத்திற்கு இத்தனை பேரா? என்ன இப்படி டீமை செலக்ட் பண்ணியிருக்கீங்க? – ரசிகர்கள் கேள்வி

அதேபோன்று தொலைபேசி வாயிலாக போட்டிகளை காண விரும்புவோர் FANCODE என்கிற ஆப்பின் மூலமாக பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டிடி ஸ்போர்ட்ஸில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement