IND vs WI : ஒரு இடத்திற்கு இத்தனை பேரா? என்ன இப்படி டீமை செலக்ட் பண்ணியிருக்கீங்க? – ரசிகர்கள் கேள்வி

ind
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியாது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து இந்திய அணி தொடர்ந்து அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் ஓய்வின்றி விளையாடி வருவதால் அவ்வப்போது முதன்மை வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

IND vs ENG TEam INDIA

- Advertisement -

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் முடிந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடர்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவான் அணியை கேப்டனாக வழி நடத்துகிறார்.

அவரது தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணியையும் ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அதில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் இடம்பெற்று இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஒருவகையில் இப்படி இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் மற்றொரு புறம் ஒரு இடத்திற்காக பல வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ruturaj

ஏனெனில் ஒருநாள் போட்டிகளுக்கான துவக்க வீரராக ஷிகர் தவான் முதன்மை வீரராக இருக்கிறார். அதோடு அவர் இந்த தொடரின் கேப்டனாகவும் இருப்பதினால் இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அவர் துவக்க வீரராக விளையாடுவது உறுதி. அதே வேளையில் மற்றொரு துவக்க வீரருக்கான இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கம் வீரர்கள் தான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

ஏனெனில் ஷிகர் தவானை தவிர்த்து மீதம் இருக்கும் ஒரு துவக்க வீரருக்கான இடத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகிய நான்கு வீரர்கள் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நான்கு பேரில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கே துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இஷான் கிஷன் 3 ஆவது வீரராக களமிறங்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அயர்லாந்தை நசுக்கிய நியூஸிலாந்து – ஹாட்ரிக் எடுப்பதில் அரிதான உலகசாதனை படைத்த நியூசி வீரர்

இப்படி இந்த ஒரு துவக்க வீரருக்கான இடத்திற்கு எதற்கு இத்தனை வீரர்களை தேர்வு செய்துள்ளீர்கள்? மிடில் ஆர்டரில் விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கிருக்கலாமே என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் சமூகவலைதளத்தின் மூலமாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement