வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்துள்ளது.
இதன் காரணமாக இன்னும் 209 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது மழையின் குறியீடு காரணமாக போட்டி அவ்வப்போது பாதிக்கப்பட்டது.
அதனால் மூன்றாம் ஆட்டத்தில் குறிப்பிட்ட ஓவர்களை விட சில ஓவர்கள் குறைவாக வீசப்பட்டன. இதன் காரணமாக இன்றைய நான்காம் நாள் ஆட்டமானது அரை மணி நேரம் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும் என்றும் வழக்கமான ஓவர்களை விட கூடுதலான ஓவர்கள் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் வீசப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : IND vs WI : சீக்கிரமா அதை செய்ங்க, 500வது போட்டியில் சதமடித்த விராட் கோலியிடம் – ஜாம்பவான் பிரைன் லாரா முக்கிய கோரிக்கை
இப்படி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதால் வழக்கமான ஆட்டநேரத்தை விட இன்றைய நான்காம் நாள் ஆட்டமானது அரைமணி நேரம் முன்கூட்டியே ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.