IND vs WI : 4வது டி20 நடைபெறும் அமெரிக்காவின் லாடர்ஹில் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Lauderhill Cricket Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பின்னடைவுக்குள்ளான இந்தியா 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா இளம் வீரர்களுடன் தலைமையில் இத்தொடரில் விளையாடி வரும் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தும் பேட்டிங் சுமாராக இருந்ததால் முதலிரண்டு போட்டிகளில் தோல்வி கிடைத்தது.

இருப்பினும் 3வது போட்டியில் சூரியகுமார் அதிரடியாக செயல்பட்டு வெற்றியை கொடுத்தது போல இத்தொடரை வென்று இந்தியாவை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க திலக் வர்மாவுடன் எஞ்சிய பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மறுபுறம் முதலிரண்டு போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் இன்னும் வீழ்ந்துவிடவில்லை என்பதை நிரூபித்தது. இருப்பினும் 3வது போட்டியில் தோற்ற அந்த அணி எஞ்சிய போட்டிகளில் வென்று பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது.

- Advertisement -

லாடர்ஹில் மைதானம்:
இதுவரை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மட்டும் நடைபெற்று வந்த இத்தொடரின் 4 மற்றும் 5வது போட்டிகள் ஆகஸ்ட் 12, 13 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் லாடர்ஹில் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த 2007இல் தோற்றுவிக்கப்பட்டு கடந்த 2010 முதல் டி20 போட்டிகளை நடத்தி வரும் இந்த மைதானத்தில் இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

1. அதில் 9 போட்டிகளில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 3 வெற்றியும் 5 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. மறுபுறம் 2016இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1 ரன்னில் தோற்றதை தவிர்த்து இந்த மைதானத்தில் களமிறங்கிய 6 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. அப்படி இந்தியாவுக்கு ராசியாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிக டி20 ரன்கள் அடித்த வீரராக ரோஹித் சர்மா (5 இன்னிங்ஸில் 196 ரன்கள்) சாதனை படைத்துள்ளார். மேலும் இம்மைதானத்தில் சதமடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார் (110*, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2016).

3. இம்மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை (6) எடுத்து சிறந்த பந்து வீச்சை (4/16) பதிவு செய்த இந்திய பவுலராக ரவி பிஷ்னோய் திகழ்கிறார். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 245/6, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2016.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் லாடர்ஹில் நகரில் போட்டி நாளன்று சராசரியாக 20% மழை மட்டுமே பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. மேலும் 5வது போட்டி நடைபெறும் நாளன்று 50% மட்டும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால் இந்த 2 போட்டிகளுமே முடிவு கிடைக்கும் அளவுக்கு முழுமையாக நடக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் லாடர்ஹில் மைதானத்தில் இருக்கும் பிட்ச் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தும் அளவுக்கு ஃபிளாட்டாக இருக்கும் என்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். ஏனெனில் இங்கு நடைபெற்ற 14 டி20 போட்டிகளில் 3 முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2016இல் இந்தியா இங்கு வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 246 ரன்களை வெறும் 1 ரன்னில் மட்டுமே தவற விட்டது.

- Advertisement -

அந்தளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் நேரம் செல்ல செல்ல மித வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதனால் இங்கு சேசிங் செய்வது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. அதனாலயே இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 165 ரன்களாகவும் 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 123 ரன்களாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க:பி.சி.சி.ஐ யின் தடை நீங்கியது. புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ள ராயுடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் இங்கு நடைபெற்ற 14 போட்டிகளில் 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்ற நிலையில் வெறும் 2 முறை மட்டுமே சேசிங் செய்த அணிகள் வென்றன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பெரிய ஸ்கோர் அடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்கலாம்.

Advertisement