பி.சி.சி.ஐ யின் தடை நீங்கியது. புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ள ராயுடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Rayudu
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியிருந்த அம்பத்தி ராயுடு சென்னை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற அந்த இறுதிப் போட்டியோடு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 37 வயதான அம்பத்தி ராயுடு இந்திய அணிக்காகவும் சரி, ஐபிஎல்-லிலும் சரி பல ஆண்டுகள் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.

தற்போது அவர் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டதால் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க இருக்கிறார். அதன்படி ஏற்கனவே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த மேஜர் லீக் டி20 லீக்கில் பங்கேற்க இருந்தது.

- Advertisement -

ஆனால் அப்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ராயுடு ஓய்வை அறிவித்து ஓர் ஆண்டுக்குள் எந்த ஒரு வெளிநாட்டு தொடர்களிலும் பங்கேற்க கூடாது என்ற விதிமுறையை வகுத்ததால் அவர் அந்த தொடரில் விளையாடாமல் மேஜர் லீக் டி20 தொடர் ஆரம்பிப்பதற்கு 5 நாட்கள் முன்னதாக அந்த தொடரில் இருந்து விலகி இருந்தார்.

ஆனால் தற்போது அந்த தடையெல்லாம் நீங்கிய பின்னர் அம்பத்தி ராயுடு மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடைபெற உள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட செயின்ட் கிட்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் அவர் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே கரீபியன் லீக் தொடரில் இந்திய வீரரான பிரவீன் தாம்பே கடந்த-2020 ஆம் ஆண்டு ட்ரின்பேங்கோ அணிக்காக விளையாடி இருந்தார். அவருக்கு அடுத்து தற்போது அம்பத்தி ராயுடு தான் இரண்டாவது வீரராக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜடேஜாவ ஏன் கேட்கல, எப்படா நானும் விராட் கோலியும் போவோம்னு பாக்குறீங்களோ – டி20 கேரியர் ரோஹித் சர்மா பேட்டி

இந்நிலையில் இந்த கரீபியன் லீக் தொடரில் விளாயாட இருப்பது குறித்து பேசியிருந்த அம்பத்தி ராயுடு கூறுகையில் : நான் இந்த வருடன் செயின்ட் கிட்ஸ் அணியுடன் விளையாட ஒப்பந்தமாகியிருப்பதில் மகிழ்ச்சி. என்னுடைய சிறப்பான பங்களிப்பை அந்த அணிக்காக வழங்க காத்திருக்கிறேன் என ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement