ஜடேஜாவ ஏன் கேட்கல, எப்படா நானும் விராட் கோலியும் போவோம்னு பாக்குறீங்களோ – டி20 கேரியர் ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma Virat kohli
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கடந்த 10 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் இரட்டை குழல் துப்பாக்கிகளாகவும் எதிரணிகளை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்கள். அதில் விராட் கோலி கடந்த 2013 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 25,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார்.

அதே போல ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய ரோகித் சர்மா 2013க்குப்பின் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றது முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து 2019 உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து இந்தியாவுக்கு மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். மேலும் 2019 வரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே அசத்தி வந்த அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை சிறப்பாக செயல்பட்டு தன்னைச் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

எப்படா போவாங்கன்னு:
இருப்பினும் தற்போது சராசரியாக 35 வயதை கடந்து விட்ட இவர்களில் 2019க்குப்பின் ஃபார்மை இழந்து தடுமாறிய விராட் கோலி கடுமையாக போராடி தன்னுடைய ஃபிட்னஸ் பயன்படுத்தி பழைய ஃபார்முக்கு திரும்பி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்து அசத்தி வருகிறார். ஆனால் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடித்து வரும் ரோஹித் சர்மா 2019க்குப்பின் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்த முடியாமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் ஐபிஎல் 2023 தொடரில் அதிக டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையும் படைத்தார்.

அதனால் சீனியர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அதனால் கடந்த 2022 டி20 உலக கோப்பைக்கு பின் எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாத விராட் கோலி – ரோஹித் சர்மாவின் டி20 கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதில் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான மகத்தான இன்னிங்ஸ் விளையாடி அதிக ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடிய விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டுமென கேட்கும் ரசிகர்கள் வேண்டுமானால் ரோஹித் சர்மாவை கழற்றி விடுங்கள் என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

இந்நிலையில் 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே தாமும் விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா தங்களைப் போலவே டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவை பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். தாமும் விராட் கோலியும் எப்படா போவாங்க என்று எதிர்பார்ப்பவர்களுக்கு சமீபத்திய பேட்டியில் அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “கடந்த வருடமும் நாங்கள் இதை தான் செய்தோம். அதாவது டி20 உலக கோப்பை இருந்ததால் நாங்கள் பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை”

“தற்போதும் அதையே நாங்கள் மீண்டும் செய்கிறோம். அதாவது ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறுவதால் நாங்கள் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. நீங்கள் அனைத்து போட்டிகளையும் விளையாடாமல் உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களுக்கு முன்பே முடிவு செய்தோம். மேலும் எங்களைப் போலவே டி20 போட்டிகளில் விளையாடாத ரவீந்திர ஜடேஜா பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? உங்களுடைய கவனத்தை நான் புரிந்து கொள்கிறேன்”

இதையும் படிங்க:நான் கூட அடுத்த கிங்’குன்னு நெனச்சேன் ஆனா சவாலான பிட்ச்சில் ரொம்ப தடுமாறுறாரு – இளம் வீரர் மீது ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

“இங்கே ஜடேஜா விளையாட போதிலும் யாரும் கேட்பதில்லை. மேலும் உண்மையாக நான் உலக கோப்பையை வென்றதில்லை. எனவே அந்த கனவை வெல்வதற்காக போராடுவதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது. மேலும் உலக கோப்பை உங்களுக்கு தட்டில் வைத்து கொடுக்க மாட்டார்கள் நீங்கள் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அதை தான் 2011 முதல் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement