IND vs WI : முதல் ஒன்டே நடைபெறும் குயின்ஸ் பார்க் மைதானம் எப்படி? – பிட்ச் மற்றும் வெதர் ரிப்போர்ட் இதோ

Queens Park Oval Trinidad Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் தலைமையில் சமீபத்திய தொடர்களில் அசத்திய சூர்யகுமார் யாதவ் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. அதை புதிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் தலைமையில் ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் போன்ற நல்ல வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளிலுமே சம பலத்துடன் கூடிய வீரர்கள் நிறைந்திருப்பதால் இத்தொடரை வெல்வதற்கு இரு அணிகளிடமும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மிகவும் விறுவிறுப்பாக அமையப்போகும் இந்த தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 22-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மேற்கிந்திய தீவுகளில் உள்ள ட்ரினிடாட் & தபாகோ நகரில் துவங்குகிறது.

- Advertisement -

குயின்ஸ் பார்க் மைதானம்:
இந்த போட்டியானது அங்குள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இருக்கும் புகழ்பெற்ற குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 1897இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் கடந்த 1930 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பின்புறத்தில் மலைத்தொடர்களுடன் அழகான சூழலில் அமைந்துள்ள இந்த மைதானம் கடந்த 2007 உலக கோப்பையின் போது முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு 25,000 ரசிகர்கள் பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. 1983 முதல் இங்கு ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 57 போட்டிகளில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அதில் 27 வெற்றிகளையும் 25 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது, 5 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இந்த மைதானத்தில் பங்கேற்ற 21 போட்டிகளில் 11 போட்டிகளை வென்ற இந்தியா 9 போட்டிகளில் தோற்றது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. கடைசியாக கடந்த 2019இல் நடந்த ஒருநாள் தொடரில் இம்மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடிய இந்தியா 120, 114* என 2 போட்டிகளிலும் விராட் கோலி சதமடித்தால் அபார வெற்றி பெற்றது.

புள்ளிவிவரங்கள்:
1. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடிக்க டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. விராட் கோலி: 571 (9 இன்னிங்ஸ்)
2. ஷிகர் தவான் : 342 (9 இன்னிங்ஸ்)
3. வீரேந்திர சேவாக் : 302 (7 இன்னிங்ஸ்)

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒட்டுமொத்த வரலாற்றில் இந்தியாவின் விராட் கோலி அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். இங்கு அதிக அரை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக தற்போதைய கேப்டன் ஷிகர் தவான் (4) முதலிடத்தில் உள்ளார். இங்கு அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி : 120, 2019

3. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 4 இந்திய பவுலர்கள்:
1. புவனேஸ்வர் குமார் : 15 (6 இன்னிங்ஸ்)
2. ரவீந்திர ஜடேஜா : 10 (5 இன்னிங்ஸ்)
3. அஜித் அகர்கர் : 10 (7 இன்னிங்ஸ்)
4. முனாப் படேல் : 10 (6 இன்னிங்ஸ்)

- Advertisement -

4. இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக புவனேஸ்வர் குமார் (4/8) முதலிடத்தில் உள்ளார். கடந்த 2007 உலகக்கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக இந்தியா 413/5 ரன்களை எடுத்ததே ஒட்டுமொத்த வரலாற்றில் இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர் : 123, ஆல்-அவுட்

வெதர் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடக்கும் போர் டாப்ஸ்பின் நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம். இருப்பினும் வானம் நல்ல மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் பார்க் மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் என இரண்டுக்குமே சரி சமமாக இருந்து வருகிறது. அதை இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 223 என்பதில் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் பவர்பிளே ஓவர்களில் அதிகப்படியாகவும் போட்டி முழுவதும் தேவையான அளவும் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் செலுத்தலாம்.

இதையும் படிங்க : IND vs WI : தொடரை வெல்லப்போவது யார், முன்னோட்டம், அதிக ரன்கள், விக்கெட்கள் – வரலாற்று புள்ளிவிவரஙங்கள்

எனவே ஆரம்ப கட்ட ஓவர்களில் நிதானமாக செயல்பட்டு கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டால் பின்பு பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பது எளிது. மேலும் எப்போதுமே வெஸ்ட் இண்டீஸ் மண் சுழல் பந்து வீச்சுக்கு கைகொடுக்க தவறுவதில்லை. அதனால் மிடில் ஓவர்களில் திறமையை வெளிப்படுத்தும் சுழல் பந்துவீச்சாளர்கள் நல்ல விக்கெட்டுகளை எடுப்பார்கள். மேலும் இங்கு வரலாற்றில் அதிக போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது.

Advertisement