இந்தியா – இலங்கை தொடரில் ஏற்பட்ட திடீர் திருப்பம். வழிக்கு வராத பி.சி.சி.ஐ – வருத்தத்தில் இலங்கை போர்டு

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்னர் இந்திய அணி இலங்கை சென்று மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அந்த போட்டிகள் அனைத்தும் முடிவு தெரியாமல் தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் வைரஸ் தாக்கம் கம்மியாக இருப்பதன் காரணமாக பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியிருந்தது.

Ind

- Advertisement -

எப்படிப்பார்த்தாலும் வீரர்கள் தயாராவதற்கு 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும். இந்நிலையில் பிசிசிஐ அதுகுறித்து தற்போது தனது பதிலை தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே முன்னர் தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடரை ன்னும் இரு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் நடத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஒருவேளை இந்த தொடர் நடக்கும் பட்சத்தில் மைதானத்தில் 30 சதவீத அளவிற்கு ரசிகர்களை அனுமதிக்கலாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இப்படி குறைவாக அனுமதிப்பத்தின் மூலம் ரசிகர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்கலாம் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டம் தீட்டி வருகிறது.

ind vs sl

ஆனால் தற்போது வெளியான இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் அறிவிப்பு படி இந்த தொடர் ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் பிசிசிஐக்கு அவர்கள் அனுப்பிய மெயிலில் இந்த தொடருக்கான சாத்தியம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பி.சி.சி.ஐ நிர்வாகம் வீரர்களின் பாதுகாப்பு, தனிமைப்படுத்துதல், ரசிகர்கள் இல்லாமல் போட்டி போன்றவை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளதாம்.

- Advertisement -

மேலும் அரசு ஒப்புதல் இன்றி முறையான பயண வழியனுப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்தான் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் மோத வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் இத்தொடர் நடைபெறாமல் போனால் பெருமளவு நிதியிழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

IND-2

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த 3 மாதங்களாக எந்தவொரு சர்வதேச தொடரும் நடத்தப்படாமல் கிரிக்கெட் வாரியங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் இவ்வேளையில் ஒவ்வொரு நாட்டு நிர்வாகங்களும் படிப்படியாக போட்டிகளை நடத்த முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement