INDvsSL டி20 தொடர் : வெல்லப்போவது யார், அதிக ரன்கள், விக்கெட்கள் – வரலாற்று புள்ளிவிவரம் இதோ

INDvsSL
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 24-ஆம் தேதி லக்னோவில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வரும் பிப்ரவரி 26, 27 ஆகிய அடுத்தடுத்த 2 நாட்களில் நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

அதன் பின் இவ்விரு அணிகள் மோத இருக்கும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. இதில் பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வெல்லப்போவது யார்:
இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நாளை துவங்கும் டி20 தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே லக்னோ நகரை சென்றடைந்துள்ள இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலைப் பெறுவதற்கு 2 அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.

INDvsSL

இந்த 2 அணிகளில் இந்தியாவைப் பொருத்தவரை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சொந்த மண்ணில் கடந்த நவம்பர் மாதம் முதல் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த டி20, ஒருநாள் தொடர்களை 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றி பெற்ற இந்தியா சொந்த மண்ணில் பலமான அணியாக திகழ்கிறது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக தரம் உயர்ந்துள்ள இந்தியா இந்த தொடரிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மறுபுறம் தசுன் சானாகா தலைமையில் சமீப காலங்களாக பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க தடுமாறி வரும் இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இருப்பினும் குஷால் மெண்டிஸ் போன்ற ஒருசில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கும் அந்த அணியினர் இந்திய கால சூழ்நிலைகளை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். எனவே ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்கள் கொண்ட இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் சவால் கொடுக்கும் அளவுக்கு இலங்கை விளையாடும் என நம்பலாம்.

indvssl

வரலாற்று புள்ளிவிவரம்:
சரி இந்த 20 ஓவர் தொடரை முன்னிட்டு வரலாற்றில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய வரலாற்று புள்ளி விவரங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

- Advertisement -

1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதற்கு முன் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 14 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா வலுவான அணியாக காணப்படுகிறது. இலங்கை 7 போட்டிகளில் மட்டும் வென்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

indian-team

2. குறிப்பாக இந்த தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் இந்தியா 9 முறை வெற்றி பெற்று சொந்த மண்ணில் கில்லியாக உள்ளது. மறுபுறம் இலங்கை 2 போட்டிகளில் மட்டுமே வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

அதிக ரன்கள்:
இவ்விரு அணிகள் மோதிய டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் 375 (11 இன்னிங்ஸ்) ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் இலங்கை சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரராக முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார 235 (4 இன்னிங்ஸ்) ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

rohith 1

அதிக அரைசதங்கள், சதங்கள்:
டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக நட்சத்திர வீரர் விராட் கோலி (4 அரை சதங்கள்) முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த ஒரே இந்திய வீரராக ரோகித் சர்மா (1 சதம்) சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் : ரோஹித் சர்மா 118 (43), இந்தூர், 2017.

அதேபோல் இலங்கை சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக டி20 அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக குமார் சங்கக்காரா (3 அரை சதங்கள்) முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு இலங்கை வீரரும் இதுவரை சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rohith 1

அதிகபட்ச ஸ்கோர்:
டி20 க்ரிக்க்கெட்டில் இலங்கைக்கு எதிராக வரலாற்றில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 260/5, இந்தூர், 2017. அதேபோல டி20 க்ரிக்க்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் இலங்கை பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 215/5, நாக்பூர், 2009.

அதிக விக்கெட்கள்:
டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 3 இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல் இதோ:
1. யூஸ்வென்ற சஹால் : 13 விக்கெட்கள் (7 போட்டிகள்)
2. ரவிச்சந்திரன் அஷ்வின் : 13 விக்கெட்கள் (6 போட்டிகள்)
3. குல்தீப் யாதவ் : 12 விக்கெட்கள் (8 போட்டிகள்)

chahal

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 3 இலங்கை பந்து வீச்சாளர்களின் பட்டியல் இதோ:
1. டுஷ்மந்தா சமீரா : 16 (12 போட்டிகள்)
2. டீ சில்வா : 10 (6 போட்டிகள்)
3. தசுன் ஷனகா : 9 விக்கெட்கள் (15 போட்டிகள்)

Advertisement