- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா – இலங்கை சுற்றுப்பயணத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல். ரத்தாகும் வாய்ப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 18-ஆம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளதால் இந்திய வீரர்கள் இம்மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

அதன்படி பேசிய அவர் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது முன்னணி வீரர்கள் தவிர்த்து இந்தியாவில் இருக்கும் இளம் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் என்று அறிவித்தார். அதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து புதிய இந்திய அணி உருவாக்கி இந்த தொடரில் பங்கேற்க வைக்க பிசிசிஐ முடிவெடுத்தது. அதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு இந்த பயணத்தில் விளையாடும் என்றும் பல தகவல்கள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் நடைபெறுவதில் ஒரு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்தியா இலங்கை தொடர் நடைபெறும் இந்த நேரத்தில்தான் இலங்கையில் கொரோனா தீவிரமடையும் என மருத்துவக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை அர்ஜுனா டி சில்வா கூறுகையில் :

இந்தியா இலங்கை தொடர் முழுவதும் கொழும்புவில் நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அந்த காலகட்டத்தில் கொழும்புவில் கொரோனா அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நிலைமை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் முடிவுகள் தெரியும். அதனால் இந்த தொடர் குறித்து எந்த உத்திரவாதமும் தற்போது என்னால் கொடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது இந்த தொடர் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது இதன் காரணமாக இத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ? நடைபெறாதா ? என்ற சந்தேகத்தில் அவர்கள் இருக்கின்றனர் . இதன் காரணமாக தற்போது பிசிசிஐ கடும் அதிர்ப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -
Published by