- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் : மொஹாலி மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் பெங்களூருவில் நடக்கும் 2வது போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் மோத உள்ளன.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கையை பந்தாடிய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் தொடரை வென்றது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரையும் புதிய முழுநேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மொஹாலி கிரிக்கெட் மைதானம்:
இந்த தொடரின் முதலாவது போட்டி மார்ச் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 18 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி வைத்து காலப்போக்கில் படிப்படியாக உயர்ந்து எதிரணிகளை தெறிக்கவிடும் பேட்ஸ்மேனாக மாறி சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளங்கும் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த 2014 முதல் 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்ட அவர் இந்தியாவை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்து 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் தனது 100வது மைல்கல் டெஸ்ட் போட்டியை இந்த மொகாலி மைதானத்தில் விளையாடுவதை முன்னிட்டு அவரை கௌரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

- Advertisement -

ராசியான மொஹாலி:
1. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கடந்த 1992ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்திரஜித் பிந்த்ரா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பல வருடங்களாக பல சரித்திரம் வாய்ந்த முக்கியமான போட்டிகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 25000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இம்மைதானத்தில் முதல் முறையாக கடந்த 1994ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

2. இந்த மைதானத்தில் இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா அதில் 7 வெற்றிகளையும், வெறும் 1 தோல்வியை மட்டுமே பதிவு செய்துள்ளது. 5 போட்டிகள் ட்ராவில் முடிந்தது. எனவே இந்த மைதானம் இந்தியாவைப் பொருத்தவரை ஒரு ராசியான மைதானமாக கருதப்படுகிறது.

- Advertisement -

3. இங்கு இலங்கைக்கு எதிராக இந்தியா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே மோதியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு நடந்த அப்போட்டி ட்ராவில் முடிந்தது. அதேபோல் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வரலாற்று புள்ளிவிவரம்:
1. இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் 767 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

2. இங்கு அதிக அரை சதங்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 5 அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்த மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர்களாக ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், சவுரவ் கங்குலி ஆகியோர் தலா 2 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

3. இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் : 187 ரன்கள் – ஷிகர் தவான், 2013.

4. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலராக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 36 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போதைய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

4. மேலும் இங்கு ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்தியராக ஜவகல் ஸ்ரீநாத் (6/45) உள்ளார். இமைதானத்தில் அதிகபட்சமாக அனில் கும்ப்ளே மட்டும் 2 முறை 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார்.

5. இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்த தனது அதிகபட்ச ஸ்கோர் : 516 – பாகிஸ்தானுக்கு எதிராக, 2005.

வெதர் – பிட்ச் ரிப்போர்ட் :
இந்த போட்டி நடைபெறும் மொகாலியில் போட்டியின் 5 நாட்களிலும் மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஒரு சில நாட்களில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடர் : யார் கெத்து? – புள்ளிவிவரம், அதிக ரன்கள், விக்கெட்கள் – ஒரு வரலாற்று அலசல்

மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் முதல் 2 – 3 நாட்கள் நிதானத்துடனும் பொறுமையுடனும் பேட்டிங் செய்யும் வீரர்கள் எளிதாக ரன்கள் குவிக்கலாம். எனவே இந்தப் போட்டியின் ஆரம்ப நாட்களில் பந்து வீச்சாளர்களின் நிலைமை சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையை பயன்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எளிதாக விக்கெட்டுகள் கிடைக்கலாம். மேலும் இம்மைதானத்தில் எப்போதுமே கடைசி 2 நாட்களில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இந்த மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 240 ஆகும். மேலும் இந்த மைதானத்தில் இதற்கு முன் நடந்த பெரும்பாலான போட்டிகளில் சேசிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து பின்பு சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -
Published by