இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடர் : யார் கெத்து? – புள்ளிவிவரம், அதிக ரன்கள், விக்கெட்கள் – ஒரு வரலாற்று அலசல்

INDvsSL
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது.

INDvsSL

- Advertisement -

இதை இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெறும் 2-வது போட்டி பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

முன்னோட்டம்:
இந்த தொடரில் புதிய முழுநேர டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஷமி போன்ற பல நட்சத்திரங்கள் அடங்கிய இந்திய அணி திமுத் கருணாரத்னே தலைமையில் அசலங்கா, திரிமண்ணே, ஏஞ்சலோ மேத்தியூஸ், சந்திமால், குஷால் மெண்டிஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அடங்கிய இலங்கை அணியை சந்திக்க உள்ளது இரு நாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இலங்கை அணியைப் பொறுத்தவரை சமீபத்தில் நடந்த டி20 தொடரில் இடம் பெறாத பல டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் உள்ளதால் டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்த டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

avesh khan

மறுபுறம் தரமான வீரர்களை கொண்டுள்ள இலங்கையைத் தனது சொந்த மண்ணில் எதிர்கொள்வது இந்தியாவிற்கு சாதகமான அம்சமாகும். மேலும் இலங்கையை விட தரத்தில் உயர்ந்த வீரர்கள் இந்திய அணியில் நிறைந்து காணப்படுவதால் டி20 தொடரை போலவே இந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்தத் தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மும்பையில் வாயிலாக கண்டுகளிக்கலாம்.

- Advertisement -

யார் கெத்து:
1. ஆசிய கண்டத்தின் டாப் 2 கிரிக்கெட் அணிகளாக விளங்கும் இந்தியாவும் இலங்கையும் வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1982ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின. இந்தியாவில் நடந்த அந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது.

2. ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 44 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா வலுவான அணியாக காணப்படுகிறது. மறுபுறம் இலங்கை 7 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. எஞ்சிய 17 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

3. அதேபோல் இந்த தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் வரலாற்றில் இந்த 2 அணிகளும் மோதிய 20 போட்டிகளில் இந்தியா 11 வெற்றிகளை குவித்துள்ளது. எஞ்சிய 9 போட்டிகள் டிராவில் முடிந்தன. அதாவது இந்திய மண்ணில் இலங்கை இதுவரை வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதே கிடையாது.

kohli

4. இந்தியா – இலங்கை மோதிய டெஸ்ட் தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக இந்தியாவின் ஜாம்பவான் (25 போட்டிகள்) சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த இலங்கை வீரராக அர்ஜுனா ரணதுங்கா (15 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். மறுபுறம் இலங்கைக்கு எதிராக அதிக போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த இந்திய வீரராக விராட் கோலி (9 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

அதிகபட்ச ஸ்கோர்:
1. வரலாற்றில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 7256/9 டிக்ளேர், 2009, மும்பை.

2. அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் : 956/9 டிக்ளேர், 1999

Virender Sehwag Rahul Dravid IND vs SL

அதிக ரன்கள்:
1. வரலாற்றில் இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 25 போட்டிகளில் 1995 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரராக முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே 18 போட்டிகளில் 1822 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

2. தற்போது உள்ள அணியில் இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக விராட் கோலி 1004 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மறுபுறம் தற்போதைய இலங்கை அணியில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரராக அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மேத்தியூஸ் 957 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

Sachin Tendukar Muralitharan

அதிக அரை சதங்கள், சதங்கள்:
1. இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 9 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கை சார்பில் அதிக அரை சதங்கள் அடித்த வீரராக ஜெயவர்த்தனே (8 அரை சதங்கள்) முதலிடம் பிடிக்கிறார்.

2. வரலாற்றில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9 சதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். அதேப்போல் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இலங்கை வீரராக மகிளா ஜெயவர்தன 6 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போதைய அணியில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலியும் (5 சதங்கள்) இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இலங்கை வீரராக அஞ்சலோ மேத்யூஸ் (3 சதங்கள்) உள்ளார்கள்.

jayasuriya

டாப் ஸ்கோர்:
1. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இலங்கை வீரர் : சனத் ஜெயசூரியா, 340 ரன்கள், 1999.

2. அதேபோல் இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 293 ரன்கள், மும்பை, 2009.

அதிக விக்கெட்கள்:
1. இலங்கைக்கு எதிராக வரலாற்றில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அந்த அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராகவும் அவர் முதலிடம் (4 ஐந்து விக்கெட் ஹால்) பிடிக்கிறார். மேலும் இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் : மணிந்தர் சிங் : 7/51, 1986.

தற்போதைய இந்திய அணியில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஸ்வின் 50 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Muralitharan 1

2. இலங்கை சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 105 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இலங்கை பவுலராகவும் முரளிதரன் சாதித்துள்ளார், 8/87, 2001.

முக்கிய புள்ளிவிவரம்:
1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த 2 அணிகளுக்கும் இடையே இதுவரை 115 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடர்களில் 10 முறை ஒரு போட்டியில் 10 விக்கெட்களும், 48 முறை ஒரு இன்னிங்ஸ்சில் 5 விக்கெட் ஹால்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

virat

2. இத்துடன் இந்தியா-இலங்கை மோதிய டெஸ்ட் தொடர்களில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரராக இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 610 ரன்கள், 2017/18.

3. மேலும் இந்தியா-இலங்கை மோதிய டெஸ்ட் தொடர்களில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக இலங்கையின் அஜந்தா மென்டிஸ் சாதனை படைத்துள்ளார். 26 விக்கெட்கள், 2008.

rahane

4. இந்தியா – இலங்கை மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக டிஸ்மிசல்ஸ் செய்த விக்கெட் கீப்பர்களாக எம்எஸ் தோனி, ரித்திமான் சஹா, அமல் டீ சில்வா (தலா 22) ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

4. அத்துடன் இந்தியா-இலங்கை மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக இந்தியாவின் முகமது அசாருதீன் (25 கேட்ச்கள்) சாதனை படைத்துள்ளார்.

6. மேலும் வரலாற்றில் இந்தியா-இலங்கை மோதிய போட்டிகளில் ஒரு போட்டி (8 கேட்ச்கள்) மற்றும் ஒரு இன்னிங்ஸ்சில் (5 கேட்ச்கள்) அதிக கேட்ச்களை பிடித்த வீரராக இந்தியாவின் அஜிங்கிய ரஹானே சாதனை படைத்துள்ளார்.

Advertisement