IND vs SL : ஆட்டநாயகன் விருதின் மூலம் கிடைத்த பணம் எல்லாம் அவங்களுக்கு தரேன் – முகமது சிராஜ் பெருந்தன்மை

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி எட்டாவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணியின் இந்த சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டினை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக முகமது சிராஜ் இருந்தார் என்றால் அது மிகையல்ல.

ஏனெனில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர் வரை முழுவதுமாக விளையாடி ஓரளவு சவாலான இலக்கையே இந்திய அணிக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த முகமது சிராஜ் அந்த ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

அதோடு மொத்தமாக இந்த போட்டியில் 7 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த அசத்தலான பந்து வீச்சினால் இலங்கை அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே குவித்தது.

சிராஜியின் இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த ஆட்டநாயகன் முகமது சிராஜ் கூறுகையில் : நான் நீண்ட நாட்களாகவே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதாக நினைக்கிறேன்.

- Advertisement -

ஆரம்பத்தில் நான் பந்துவீசும் போது எஜ்ஜுகள் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் நிறைய எட்ஜ் கிடைத்தன. அதோடு ஆரம்பத்தில் இந்த மைதானத்தில் பந்து சீமாகி வந்தது. ஆனால் இன்று ஸ்விங் ஆகி வந்தது. எனவே நான் புல்லர் பந்துகளை வீச நினைத்தேன். அப்பொழுதுதான் பந்து நன்றாக ஸ்விங்காகும். போட்டியின் ஆரம்பத்திலேயே பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மிக கட்டுக்கோப்புடன் வீசினேன்.

இதையும் படிங்க : IND vs SL : ரொம்ப பெருமையா இருக்கு. அவரை நான் பாராட்டியே ஆகனும். அவர்தான் வெற்றிக்கு காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

அதேபோன்று எங்களது அணியில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல ஒரு பிணைப்பு இருக்கிறது அதுவும் எங்களது அணி சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக இருக்கிறது. நான் விளையாடியதிலேயே இதுதான் சிறந்த பந்துவீச்சு என்று நினைக்கிறேன். அதோடு இந்த ஆட்டநாயகன் விருது மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் நான் மைதான ஊழியர்களுக்கு வழங்க விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இந்த தொடர் நடந்திருக்காது என்று சிராஜ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement